கண்கள் வறட்சி பிரச்சனை உடனடியாக நீங்க உதவும் வீட்டு வைத்தியம்!

By Karthick M
21 Jun 2025, 21:43 IST

கண்களில் கண்ணீர் இருப்பது மிக அவசியம், இது தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும், தெளிவான பார்வைக்கு உதவுகிறது. இது குறைந்தால் கண் வறட்சி பிரச்சனை ஏற்படும்.

கண் இமைகளின் பக்கத்தில் சிறிய துளைகள் உள்ளன. இவை கண்ணீருக்குத் தேவையான லிப்பிட் அடுக்கை உருவாக்குகின்றன.

கண் பிரச்சனைகளைக் கண்டறிய சில சோதனைகளும் உள்ளன. ஒன்று ஷிமோஸ் சோதனை. TBUT என்று ஒரு சோதனையும் உள்ளது.

மருத்துவர் பரிந்துரைத்தபடி கண் சொட்டுகளைப் பயன்படுத்தலாம். அதேபோல வாரம் ஒருமுறை மிதமான தண்ணீரை பயன்படுத்தி கண்களை சுத்தப்படுத்தலாம்.

கற்றாழையின் தோலை உரித்து, சதைப்பகுதியை கண்களின் மேல் சிறிது நேரம் கட்டி வைப்பது நல்லது. கண்களைக் கழுவ குளிர்சாதனப்பெட்டியில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்த வேண்டாம்.