வெப்ப அலையிலிருந்து பாதுகாக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்!

By Karthick M
14 Apr 2024, 14:24 IST

வெப்ப அலையை கட்டுப்படுத்தும் வீட்டு வைத்தியம்

கோடை காலத்தில் வெப்ப அலைகள் கணிசமாக அதிகரிக்கும். இதனால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். வெப்ப அலைகளை தவிர்க்க உதவும் சில வீட்டு வைத்தியங்களை பார்க்கலாம்.

வெந்தயம்

வெந்தயம் உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த உதவுகிறது. இதற்கு வெந்தய டீ தயார் செய்து குடிக்கலாம்.

இளநீர்

இளநீர் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. உடல் சூட்டை குறைக்கிறது. இளநீரில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் வெப்பத்தை குறைக்கின்றன.

புதினா

புதினா உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. இதில் உள்ள அதிக மெந்தோல் தன்மை உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. இதற்கு பெப்பர்மின்ட் டீ செய்து குடிக்கலாம்.

மோர்

உடல் சூட்டை தணிக்க மோர் அருந்தலாம். இது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுவதோடு இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு ஆற்றல் அளிக்கிறது.

பழங்கள் சாப்பிடவும்

தர்பூசணி, ஆரஞ்சு மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களை உட்கொள்வது உடலில் வெப்பத்தை குறைக்க உதவுகிறது. இது வெப்ப அலைகளில் இருந்து உடலை பாதுகாக்கிறது.