வாய் புண்ணால் அவதியா? இந்த வீட்டு வைத்தியம் போதும்!

By Ishvarya Gurumurthy G
15 Dec 2023, 00:37 IST

நீங்கள் வாய் புண்களால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும். இது உங்கள் வாய் புண்களை முற்றிலும் நீக்கும்.

மஞ்சள் நீர் கொண்டு வாய் கொப்பளிக்கவும்

காலையில் எழுந்தவுடன் மஞ்சள் கலந்த நீரில் வாய் கொப்பளிக்க வாய் புண்கள் 2 நாட்களில் குணமாகும். இதற்கு 1 லிட்டர் தண்ணீரில் 5 டீஸ்பூன் மஞ்சள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். அதன் பிறகு, தண்ணீரை குளிர்வித்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை வாய் கொப்பளிக்கவும்.

நெய்

நெய்யை இரவு தூங்கும் முன் புண்களின் மீது தடவினால் நிவாரணம் கிடைக்கும். நெய்யில் உள்ள சத்துக்கள் புண்களை விரைவில் ஆற்றும்.

கொய்யா இலைகள்

கொய்யா இலைகள் புண்களை ஆற்ற உதவுகிறது. இதற்கு 2-3 இலைகளை தினமும் காலையில் மென்று சாப்பிடுங்கள்.

படிகாரம்

வாய் புண் குணமாக, வறுத்த படிகாரத்தில் கிளிசரின் கலந்து பருத்தியின் உதவியுடன் புண்களின் மீது தடவவும். இது அல்சரில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

மோர் கொண்டு வாய் கொப்பளிக்கவும்

இரவில் தூங்கும் முன்பும், காலையில் எழுந்ததும் மோர் கலந்து வாய் கொப்பளிக்க வாய் புண்கள் குணமாகும்.