காண்டாக்ட் லென்ஸ் போட்ருக்கீங்களா? முதலில் இத கவனிங்க

By Gowthami Subramani
17 Apr 2025, 18:20 IST

காண்டாக்ட் லென்ஸ்

இன்று பெரும்பாலான மக்கள் தங்கள் கண்களின் அழகை அதிகரிக்க காண்டாக்ட் லென்ஸ்களை அணிகின்றனர். ஆனால், இதைத் தொடர்ந்து பயன்படுத்துவது நம் கண்களை பல ஆபத்துகளை ஏற்படுத்தலாம். இதில் காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளைக் காணலாம்

மங்கலான பார்வை

நீண்ட நேரம் காண்டாக்ட் லென்ஸ்கள் அணிவது மங்கலான பார்வை உள்ளிட்ட பல்வேறு கண் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்

கண்களில் வலி

நீண்ட நேரம் லென்ஸ் அணிவதால் கார்னியாவில் ஆக்ஸிஜனின் அளவு குறையலாம். இது கண்களில் வலியை ஏற்படுத்தலாம்

கண் தொற்றுகள்

லென்ஸ் கண்களில் சரியாகப் பொருந்தவில்லை எனில், அது மீண்டும் மீண்டும் கார்னியாவைப் பாதித்து தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம்

கண்களில் வீக்கம்

இரவில் லென்ஸ்கள் அணிந்து தூங்குவது கண்களில் வீக்கம் போன்ற பிரச்சனைகள் பெரும்பாலும் அதிகரிக்கலாம்

கண்களில் வறட்சி

லென்ஸ்கள் அணிவதால் கண்களில் ஈரப்பதத்தைக் குறைக்கலாம். இவை கண்களில் அரிப்பு, எரிச்சல் மற்றும் சோர்வு ஏற்பட வாய்ப்பு அதிகம்

எச்சரிக்கை

லென்ஸ்களை முறையாகப் பராமரிப்பதற்கு, எப்போதும் சுத்தமான கைகளால் அவற்றைத் தொட்டு ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகு நல்ல கரைசலைக் கொண்டு கழுவி சரியான உறையில் வைக்க வேண்டும்

குறிப்பு

இதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் இணையத்தில் கூறப்பட்டதை அடிப்படையாகக் கொண்டதாகும். காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவதில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது