உடல் எடை இழப்பை சிலர் சாதாரணமாகக் கருதுவர். ஆனால் திடீர் உடல் எடை இழப்புக்கு பல்வேறு நோய்கள் காரணமாக இருக்கலாம். இதில் உடல் எடை இழப்பை ஏற்படுத்தும் நோய்கள் சிலவற்றைக் காணலாம்
நீரிழிவு நோய்
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பின், உடல் எடை இழப்பு ஏற்படலாம். அளவுக்கு அதிகமாக உடல் எடை குறைவதாக இருப்பின் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியமாகும்
தைராய்டு பிரச்சனை
தைராய்டு ஹார்மோன் சுரப்பில் பிரச்சனை ஏற்படும் போது, உடல் எடை இழப்பு ஏற்படலாம். இது உடலில் மெட்டா பாலிசத்தை அதிகரிக்கவும், கலோரிகளைக் குறைக்கவும் உதவுகிறது
கிரோன் நோய்
இந்த நோயில் ஆசன வாய் பகுதியில் வீக்கம் உண்டாகலாம். இந்த அழற்சி குடல் நோய் ஆனது கிரெலின் என்ற பசி ஹார்மோன் மற்றும் லெப்டின் என்ற ஹார்மோன்களைச் சீர்குலைப்பதால் உடல் எடை இழப்பு ஏற்படலாம்
கரோனரி இதய நோய்
திடீர் உடல் எடை குறைப்புக்கு கரோனரி தமனி நோயும் ஒரு காரணமாகும்.
மனச்சோர்வு
மனச்சோர்வு இருப்பின், நம் பசி உணர்வைக் கட்டுப்படுத்தும். இது உடல் எடை இழப்புக்கு வழிவகுக்கிறது. எனவே மனச்சோர்வு இருப்பவர்கள் அதைப் போக்குவதற்கான வழிமுறைகளைக் கையாள வேண்டும்
அடிசன் நோய்
ஆல்டோஸ்டிரோன் மற்றும் கார்டிசோல் போன்ற ஹார்மோனை அட்ரீனல் சுரப்பிகள் சரியாக சுரக்காத போது இந்த பிரச்சனை ஏற்படலாம். இதனால், உடல் எடை இழப்பு மற்றும் பசியின்மை போன்றவை உண்டாக வாய்ப்புள்ளது
பெப்டிக் அல்சர் நோய்
இது வயிற்றின் உட்புறத்தின் புண்களை ஏற்படுத்தும். இதனால் வலி மற்றும் அமிலத்தன்மையை அதிகரிக்கிறது. இதனால் சாப்பிட முடியாமல் எடையிழப்பு உண்டாகலாம்
டிமென்ஷியா
டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்கள் நினைவாற்றல் இழப்புடன் உண்ணும் திறனையும் இழக்கின்றனர். இதனால் அடிக்கடி சாப்பிட மறந்து போவதுடன், உணவை விழுங்க சிரமப்படுகின்றனர். இதனால் எடை இழப்பு உண்டாகலாம்