டிஜிட்டல் உலகில் மொபைல் போன் பயன்பாடு மிகவும் இன்றியமையாததாகி விட்டது. ஆனால் இதைப் பயன்படுத்துவது பல்வேறு உடல்நல பிரச்சனைகளைத் தருகிறது
கண் அழுத்தம்
மொபைல் ஃபோன் திரைகள் நீல ஒளியை வெளியிடுகிறது. இது கண்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். இதனால் மங்கலான பார்வை, உலர் கண்கள், தலைவலி மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமம் போன்றவை ஏற்படலாம்
இதய பிரச்சனைகள்
மொபைல் போன் பயன்பாடு அதிலும் குறிப்பாக உறங்கும் நேரத்துக்கு அருகில் இதய பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதன் நீண்ட கால வெளிப்பாடு இதய நோய் அபாயத்தை அதிகரிக்க வழிவகுக்கிறது
தூக்கக் கோளாறுகள்
படுக்கைக்கு முன் மொபைல் ஃபோனைப் பயன்படுத்துவது பொதுவானதாக இருப்பினும், அது தூக்கக் கோளாறுகளை ஏற்படுத்தலாம். விளக்குகள் அணைத்த பிறகு, மொபைல் போன்களைப் பயன்படுத்துவதால் தூக்கத்தின் தரம் பாதிக்கப்படலாம்
குறைந்த அறிவாற்றல் செயல்பாடு
மொபைல் போன்களை அதிகம் பயன்படுத்துவது அறிவாற்றல் செயல்பாட்டை பாதிக்கலாம். இதனால் முக்கியமான பணிகள் மற்றும் வேலைகளில் கவனம் செலுத்தும் திறனைக் குறைக்கிறது
தசைக்கூட்டு பிரச்சனை
அடிக்கடி மொபைல் ஃபோனைப் பயன்படுத்துவதால் ஏற்படும் மோசமான தோரணை காரணமாக தசைக்கூட்டு பிரச்சனை ஏற்படலாம். குறிப்பாக கழுத்து, மேல் முதுகு போன்றவற்றை பாதிக்கிறது
உளவியல் அழுத்தம்
தினசரி மொபைல் ஃபோனைப் பயன்படுத்துவதால் மன அழுத்தம், பதட்டம் போன்றவை ஏற்படலாம். இந்த பழக்கங்கள் மனநலப் பிரச்சனைகளின் அளவை அதிகரிக்கலாம்