மஞ்சளை நேரடியாக உணவில் சேர்த்தால் கிடைக்கும் நன்மைகள்!

By Karthick M
28 Feb 2024, 14:24 IST

மஞ்சள் மருத்துவ குணங்கள்

மஞ்சளில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதை நேரடியாக உணவில் கலந்து உட்கொண்டால் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அவை என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

ஆரோக்கிய நன்மை

மஞ்சளில் மருத்துவ குணங்கள் உள்ள, அவை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதை நேரடியாக பாலிலோ அல்லது கஷாயத்திலோ கலந்து குடிக்கும் போது நோய் எதிர்ப்பு சக்தி நன்கு அதிகரிக்கும்.

மஞ்சளில் உள்ள பண்புகள்

மஞ்சள் சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இதில் ஆன்டி பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு உடலை தொற்றுநோய்களில் இருந்து பாதுகாக்கும்.

பால் மற்றும் மஞ்சள்

மஞ்சள் மற்றும் பால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க இது மிக முக்கியம். பாக்டீரியா மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை இது கொண்டுள்ளது. இது உடலை பாதுகாக்க உதவுகிறது.

மஞ்சள் பால் செய்வது எப்படி?

ஒரு கிளாஸ் சூடான பாலில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் இலவங்கப்பட்டை, சிறிது இஞ்சி தூள் மற்றும் 1 ஸ்டார் சோம்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி உட்கொள்ளவும். இது உடல் வலி மற்றும் வீக்கத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

மஞ்சள் மற்றும் துளசி கஷாயம்

மஞ்சள் மற்றும் துளசியை கஷாயம் செய்து குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதை உட்கொள்வது உடலை எந்த வகையான தொற்றுநோயிலிருந்தும் பாதுகாக்க உதவுகிறது. இது இருமல் மற்றும் சளி பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.

மஞ்சள் மற்றும் துளசி கஷாயம் செய்வது எப்படி?

1 கப் தண்ணீர், 5-6 துளசி இலைகள், 1 துண்டு இஞ்சி மற்றும் மஞ்சள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். துளசி இலை, இஞ்சி, மஞ்சள் ஆகியவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியாகும் வரை கொதிக்க வைத்து வடிகட்டி இப்போது குடிக்கவும்.

முன்னெச்சிரிக்கை முக்கியம்

மஞ்சள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும் அதை குறைந்த அளவில் அளவாக மட்டுமே உட்கொள்வது நல்லது. ஏதேனும் கடுமையான பிரச்சனை ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.