ஜாதிக்காய் எண்ணெயின் ஆரோக்கிய நன்மைகள் இதோ!

By Gowthami Subramani
21 Jun 2024, 09:00 IST

சில அத்தியாவசிய எண்ணெய்கள் கூடுதல் சுவை, புத்துணர்ச்சி மற்றும் நறுமணத்தை சேர்ப்பதுடன், பல்வேறு வழிகளில் நன்மை பயக்கும். அந்த வகையில், ஜாதிக்காய் எண்ணெய் தரும் அற்புத நன்மைகளைக் காணலாம்

இரத்த ஓட்டத்தை அதிகரிக்க

ஜாதிக்காய் எண்ணெயில் கால்சியம், இரும்பு, மாங்கனீசு, தாதுக்கள், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளது. இவை உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது

செரிமான பிரச்சனைக்கு

இந்த எண்ணெயில் உள்ள பைட்டோநியூட்ரியண்ட்ஸ் இரைப்பை குடல் உறுப்புகளை தளர்த்துவதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும் வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டலைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது

சுவாச பிரச்சனைகளுக்கு

ஒவ்வாமை, ஆஸ்துமா மற்றும் மூச்சுத்திணறல் போன்ற சுவாச பிரச்சனைகளைச் சமாளிக்க ஜாதிக்காய் எண்ணெய் பெரிதும் உதவுகிறது. மேலும் இது சளி அறிகுறிகள் மற்றும் நெரிசலைக் குறைக்கிறது

மாதவிடாய் வலி தீர

மாதவிடாய் சமயத்தில் அடிவயிற்றில் ஜாதிக்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது, ஹார்மோன் சமநிலையின்மையைக் குறைத்து, மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் தருகிறது

வாய் துர்நாற்றத்தை நீக்க

ஜாதிக்காய் எண்ணெயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாயில் உள்ள பாக்டீரியா மற்றும் துர்நாற்றத்தை போக்க உதவுகிறது. மேலும் இதன் ஆன்டிசெப்டிக் தன்மை ஈறுகள், பற்களில் ஏற்படும் வலியைப் போக்க பயனுள்ளதாக இருக்கும்

நல்ல தூக்கத்திற்கு

ஜாதிக்காய் எண்ணெய் நரம்பு மண்டலத்தை தளர்த்தி இயற்கையாகவே தூக்கத்தை ஏற்படுத்த உதவுகிறது. இது மூளையில் இருந்து செரோடோனின் வெளியீட்டை அதிகரிப்பதுடன், நிம்மதியான உணர்வைத் தருகிறது

மன அழுத்தத்தைப் போக்க

ஜாதிக்காய் எண்ணெய் ஒரு தூண்டுதல் மற்றும் மயக்க மருந்தாக செயல்பட்டு மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வைச் சமாளிக்கிறது. மேலும், இது உயர் இரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவுகிறது