பல்வேறு நோய்களைத் தீர்க்கும் சிறந்த மூலிகைகளில் ஒன்று கீழாநெல்லி ஆகும். இது ஒரு அரிதான மூலிகையாகும். உடலில் எந்தெந்த பிரச்சனைக்குக் கீழாநெல்லி உதவுகிறது என்பது குறித்து காண்போம்
கல்லீரல் நோய்
எல்லா வகையான கல்லீரல் நோய்களுக்கும் கீழநெல்லி மிகச்சிறந்த தீர்வாக அமையும். இவை உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, கல்லீரலைப் பாதுகாப்பதற்கான வேலையைச் செய்கிறது. இதற்கு இதில் உள்ள புரதம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளே காரணமாகும்
மஞ்சள் காமாலை
கல்லீரல் நோய்களில் ஒன்றாக விளங்குவது மஞ்சள் காமாலை. ஆயுர்வேதத்தில் மஞ்சள் காமாலையை விரட்டக்கூடிய சிறந்த மூலிகை கீழாநெல்லிக்காய் ஆகும். இதை வெறும் வயிற்றில் மோரில் கலந்து குடிக்க மஞ்சள் காமாலையை கட்டுக்குள் கொண்டு வர முடியும்
கண் நோய்க்கு
கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தீர்ப்பதில் கீழாநெல்லி உதவுகிறது. காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் கீழாநெல்லி பொடியை வெந்நீரில் கலந்து குடித்து வர கண் பார்வை மேம்படும்.
ஒற்றைத் தலைவலி
இன்று பெரும்பாலானோருக்கு ஏற்படும் ஒற்றைத் தலைவலி பிரச்சனையிலிருந்து விடுபட கீழாநெல்லி உதவுகிறது. கீழாநெல்லி தைலத்தை வாரம் ஒரு முறை உச்சந்தலையில் தேய்த்து ஊறவிட்டு, தலைக்கு குளித்து வர தலைவலி பிரச்சனை தீரும்
சரும பிரச்சனைக்கு
கீழாநெல்லியில் ஆன்டிஃபங்கல் பண்புகள் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பண்புகளைக் கொண்டுள்ளது. இவை சருமத்தில் ஏற்படும் தடிப்புகள், அரிப்பு, காயங்கள் போன்றவற்றை சரிசெய்ய கீழாநெல்லி உதவுகிறது
பித்தப்பை கற்கள்
பித்தப்பையில் உண்டாகும் கற்களை வெளியேற்ற கீழாநெல்லி சிறந்த தேர்வாகும். இதில் உள்ள தெரபிக் மற்றும் ஆல்கலைசிங் பண்புகள் பித்தப்பையில் கற்கள் உருவாகாமல் தடுப்பதுடன், கற்களை அழிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த
இரத்த ஓட்டத்தை அதிகரித்து, இரத்த அழுத்தத்தை சீராக வைக்க கீழாநெல்லி சிறப்பாகச் செயல்படுகிறது. கீழாநெல்லியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதய நோய் அபாயத்தைத் தடுக்க முடியும்
அசிடிட்டி
உடலில் பித்தம் அதிகமாகும் போது அசிடிட்டி ஏற்படும். அசிடிட்டி பிரச்சனைக்கு கீழாநெல்லியை மிகச்சிறந்த அருமருந்து என்றே கூறலாம். கீழாநெல்லியை டீ போல செய்து குடித்து வர அசிடிட்டியிலிருந்து விடுபடலாம்