ஆயுர்வேதத்தில் சிறந்த விளங்கும் மூலிகைகளில் ஒன்றாக அஸ்வகந்தா உள்ளது. இது ஆண்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இதில் ஆண்கள் அஸ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்
எடை மேலாண்மைக்கு
அஸ்வகந்தா உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும், வளர்சிதை மாற்றத்தை சீராக்கவும் உதவுகிறது. மேலும் இது பசியைக் குறைக்கவும், ஆரோக்கியமான உடல் எடையை மேம்படுத்தவும் உதவுகிறது
இதய ஆரோக்கியத்திற்கு
அஸ்வகந்தாவை வழக்கமாக எடுத்துக் கொள்வது கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது
டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க
ஆண்கள் அஸ்வகந்தாவை எடுத்துக் கொள்வது டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. இது தசை வலிமை, நிறை மற்றும் ஒட்டுமொத்த உயிர்ச்சக்தியை மேம்படுத்த உதவுகிறது. எனவே பாடி பில்டர்கள், விளையாட்டு வீரர்களுக்கு இது சிறந்த தேர்வாகும்
செயல்திறனை அதிகரிக்க
அஸ்வகந்தா உட்கொள்வது சகிப்புத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலம் உடலின் செயல்திறனை மேம்படுத்தலாம். இது சோர்வைக் குறைப்பதுடன், ஒட்டுமொத்த ஆற்றல் அளவை அதிகரிக்கிறது
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
அஸ்வகந்தா வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு உதவுகிறது. இதன் மூலம் நோய்த்தொற்றுக்களிலிருந்து எளிதில் பாதுகாப்பாக இருக்கலாம்
சிறந்த தூக்கத்திற்கு
அஸ்வகந்தா தூக்கமின்மைக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. இது நரம்பு மண்டலத்தில் அமைதியான விளைவுகளை ஏற்படுத்தி நல்ல தூக்கத்தைத் தருகிறது. இரவு நேரத்தில் அஸ்வகந்தா பால் குடிப்பது மிகுந்த நன்மை பயக்கும்
பாலியல் ஆரோக்கியத்திற்கு
ஆண்களுக்கு அஸ்வகந்தா பாலியல் செயல்திறனை மேம்படுத்தவும், ஆண்மையை அதிகரிக்கவும், விறைப்புத்தன்மை மற்றும் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது
மன அழுத்தத்தைக் குறைக்க
அஸ்வகந்தா, ஒரு அடாப்டோஜென் ஆகும். அதாவது கார்டிசோலின் அளவைக் குறைப்பதன் மூலம் மன அழுத்தத்தை நிர்வகிக்க உதவுகிறது. மேலும் பதட்டத்தைக் குறைத்து மனநிலையை மேம்படுத்துகிறது