காரமான உணவு சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்!

By Karthick M
29 Aug 2024, 14:38 IST

எண்ணெய் மற்றும் மசாலா இல்லாத இந்திய உணவு மிக அரிது. மசாலா பொருள் என்றாலே காரம் தான். காரமான உணவை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை அறிந்துக் கொள்வோம்.

சில மசாலா பொருட்கள் உடலுக்கு நன்மை பயக்கும் என்றாலும் மிளகாய் உள்ளிட்டவை கலந்த காரமான மசாலாப் பொருட்களை அதிகமாக உட்கொள்வது உடலுக்கு பல தீங்குகளை ஏற்படுத்தும்.

காரமான உணவை அதிகம் உட்கொள்வதால் உடலில் கேப்சைசின் ஹார்மோன் அதிகமாக வெளியிடப்படுகிறது. இதனால், சிலர் செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரலாம்.

காரமான உணவை உட்கொள்வது உங்கள் குடல் நுண்ணுயிரிகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, இதனால் செரிமான அமைப்பு பலவீனமடைகிறது.

அதிக காரமான உணவை சாப்பிடுவது வயிற்றில் அதிகப்படியான அமிலம் உற்பத்தியாகி இரத்த ஓட்டத்தில் நுழையும். நெஞ்செரிச்சல், அமில வீச்சு, இரைப்பை குடல் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.