நீங்கள் கோபமாகவும் மன அழுத்தமாகவும் இருக்கும்போது எந்தெந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதை இங்கே காண்போம்.
காஃபின்
எனர்ஜி பானங்கள், பிளாக் டீ, சில பானங்கள் காஃபின் அளவை அதிகரிக்கும். இது நரம்பு மண்டலத்தைத் தூண்டும். அமைதியின்மை, எரிச்சல் போன்ற உணர்வுகளை அதிகரிக்கக்கூடும்.
சர்க்கரை உணவுகள்
அதிக சர்க்கரை இரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்ற இறக்கங்களுக்கு வழிவகுக்கும். அதிகப்படியான சர்க்கரை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
பதப்படுத்தப்பட்ட உணவு
இந்த வகை உணவுகளில் அதிக அளவு ஆரோக்கியமற்ற கொழுப்புகள், சேர்க்கைகள் உள்ளன. இது சமநிலையை சீர்குலைத்து, மனநிலை மற்றும் உணர்ச்சி நிலையை பாதிக்கும்.
மது
சிலர் கோபம் அல்லது மன அழுத்தத்தைச் சமாளிப்பதற்கான வழிமுறையாக மதுவை நினைக்கிறார்கள். ஆனால் இது எதிர்மறை உணர்ச்சியை ஏற்படுத்தும்.
காரமான உணவு
காரமான உணவுகள் உடல் வெப்பநிலையில் தற்காலிக அதிகரிப்பை ஏற்படுத்தும் மற்றும் சண்டை எதிர்வினை போன்ற உணர்வை தூண்டும்.