சுற்றுச்சூழல் மாசுபாடு, தூசிகள் போன்ற ஒவ்வாமை காரணத்தால் சைனஸ், ஆஸ்துமா, வீசிங் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இதில் நெஞ்சு சளி பிரச்சனைகள் அதிகரிக்கும் போது சைனஸ் பிரச்சனையும் அதிகரிக்கலாம்
தவிர்க்க வேண்டியவை
சளியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இந்த சைனஸ் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். இதற்கு முதலில் சளியைத் தூண்டும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்
இனிப்பு உணவுகள்
உடலில் சளி, இருமல் உள்ளிட்ட நோய்த்தொற்றுக்களை உண்டாக்கும் கெட்ட பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட நோயெதிர்ப்புச் சக்தி தேவை. ஆனால், இனிப்புகளை உட்கொள்வது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும். எனவே இனிப்பு உணவுகளைத் தவிர்க்க வேண்டும்
தக்காளி
இது உடலுக்குத் தேவையான அடிப்படை ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. எனினும் ஹிஸ்டமைன் என்ற இரசாயனத்தை உடலில் உற்பத்தி செய்வதால் சளி தொல்லை அதிகமாகிறது. எனவே சைனஸ் பிரச்சனை கொண்டவர்கள் தக்காளியைத் தவிர்ப்பது நல்லது
வாழைப்பழம்
மாவுச்சத்துடன், சர்க்கரையும் நிறைந்துள்ள வாழைப்பழத்தை உட்கொள்வது சைனஸ் பிரச்சனையை மேலும் அதிகரிக்கும். இது இயல்பாகவே சளியை உற்பத்தி செய்யும் தன்மையைக் கொண்டதால் வாழைப்பழத்தைத் தவிர்ப்பது நல்லது
சிவப்பிறைச்சி
இதில் அதிகளவு புரதம் மற்றும் கொழுப்புச் சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை உட்கொள்வது நெஞ்சுக் கூட்டுப் பகுதிகளில் சளியின் தேக்கத்தை அதிகரிக்கும். எனவே சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் சிவப்பிறைச்சிகளைத் தவிர்க்க வேண்டும்
ஃபாஸ்ட் ஃபுட்
ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளில் அதிகளவு குளூட்டமேட், செயற்கை நிறமூட்டுகள், ஆமானே சோடியம் போன்ற வேதிப்பொருள்கள் அதிகளவில் உள்ளது. ஒவ்வாமை, அழற்சி இருக்கும் சமயங்களில் இந்த உணவுகளை உட்கொள்ள்ளும் போது கிருமிகளை எதிர்த்துப் போராடும் திறனை குறைத்துவிடும்
வறுக்கப்பட்ட உணவுகள்
எண்ணெயில் பொரித்த உணவுகள், வறுத்த உணவுகள் போன்றவை வயிற்று வலி, அஜீரணக் கோளாறை ஏற்படுத்துவதுடன், நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தும். நோயெதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால் ஒவ்வாமை பிரச்சனைகள் அதிகமாகலாம்
கார்பனேட்டட் பானங்கள்
சளி, மூக்கடைப்புக்கு குளிர்ச்சியான பானங்களைத் தவிர்த்து சூடான பானங்களைக் குடிக்க வேண்டும். இதில், குளிர்ச்சியான அல்லது சர்க்கரை அதிகம் உள்ள பானங்களை எடுத்துக் கொள்வது சைனஸ் பிரச்சனையை மேலும் அதிகரிக்கலாம்