குளிர்காலத்தில் பல்வேறு காரணங்களால் ஒவ்வாமை போன்ற அலர்ஜி பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த அலர்ஜி பிரச்சனையைத் தவிர்க்க உதவும் சில உணவுகளைக் காணலாம்
குவெர்சடின் உணவுகள்
வெங்காயம், பெர்ரிகள் மற்றும் ஆப்பிள்களில் குவெர்சடின் என்ற இயற்கை தாவர நிறமி நிறைந்துள்ளது. இவை ஆன்டிஹிஸ்டமைனாக செயல்பட்டு, வீக்கத்தைக் குறைக்கிறது
சிட்ரஸ் பழங்கள்
வைட்டமின் சி, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், ஒவ்வாமை எதிர்விளைவுகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது
மஞ்சள்
இதில் வலுவான அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளன. இவை ஒவ்வாமை அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது
தேன்
இனிப்பு சுவையுடன் இயற்கையான நோயெதிர்ப்புச் சக்தியைத் தருகிறது. சுற்றுச்சூழலால் ஏற்படும் ஒவ்வாமை பிரச்சனையைத் தவிர்க்க தேன் உதவுகிறது
புரோபயாடிக் நிறைந்த தயிர்
தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் குடலை மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. இவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரித்து ஒவ்வாமைக்கான வாய்ப்பைக் குறைக்கிறது