ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தினசரி காலை இதை ஃபாலோ பண்ணுங்க!

By Karthick M
22 May 2025, 02:52 IST

தினசரி காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடகிறோம், என்ன குடிக்கிறோம், என்ன செய்கிறோம் என்பதை பொறுத்து ஒட்டுமொத்த ஆரோக்கியமும் இருக்கும்.

மைன்ட்ஃபுல் தியானம் என்பது உடல் மற்றும் மனம் ஒரு நிலைப்படுத்துவதை உள்ளடக்கியதாகும். தினசரி காலை இதை செய்யலாம்.

காலையில் உடற்பயிற்சி போன்ற உடல் செயல்பாடுகளை மேற்கொள்வது ஆற்றல் அளவை அதிகரிக்கவும், ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும் உதவும்.

ஊட்டச்சத்து மிகுந்த ஒரு சமச்சீரான காலை உணவு சரியான நாளைத் தொடங்குவதற்குத் தேவையான ஆற்றலையும், அத்தியாவசிய வைட்டமின்களையும் வழங்குகிறது.

வெதுவெதுப்பான நீருடன் எலுமிச்சை சேர்த்து தினசரி காலை உட்கொள்வது பல்வேறு நன்மைகளைத் தருகிறது.