சிவப்பு இறைச்சி சாப்பிடுவோர் கவனத்திற்கு!

By Karthick M
21 May 2025, 22:21 IST

சிவப்பு இறைச்சி நம்மில் பலருக்கு பிடிக்கும். சிக்கனை விட பலர் சிவப்பு இறைச்சியை அதிகம் விரும்பி உண்ணுகிறார்கள். இது சாப்பிட்டால் வரும் பிரச்சனையை பார்க்கலாம்.

சிவப்பு இறைச்சி (Red Meat) என்பது பாலூட்டிகளிலிருந்து எடுக்கப்பட்ட இறைச்சி ஆகும். இது பல நன்மைகளை கொண்டிருந்தாலும், சில பாதிப்புகளையும் கொண்டுள்ளது.

ரெட் மீட் சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதோடு இதயம் தொடர்பான நோய்களும் அதிகரிக்கும்.

குறிப்பாக, ரெட் மீட் சாப்பிடுவது டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாரமும் அதிக சிவப்பு இறைச்சியை உண்பவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து 62% அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.