ஆஸ்துமா வரதுக்கு முன்னாடி தோன்றும் அறிகுறிகள்

By Gowthami Subramani
21 Jul 2024, 17:30 IST

ஆஸ்துமா தாக்குதல் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. இந்த சூழ்நிலையில் ஆஸ்துமா தாக்குதல் ஏற்படும் முன் அதன் அறிகுறிகளைப் பற்றித் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். இதில் ஆஸ்துமா ஏற்படும் முன் தோன்றும் அறிகுறிகளைக் காணலாம்

தசைச் சுருக்கம்

ஆஸ்துமா தாக்குதல் ஏற்படும் போது நோயாளிகளின் தசைகள் சுருங்கத் தொடங்கலாம். இந்த சூழ்நிலையில், தசைச் சுருக்கத்தின் அறிகுறிகளுக்கு கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகும்

நெஞ்செரிச்சல்

ஆஸ்துமா பிரச்சனை அதிகமாகும் சமயத்தில் நெஞ்செரிச்சல் உணர்வு ஏற்படலாம். இந்த சூழ்நிலையில், மார்பில் எரியும் உணர்வு ஏற்படின் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது

தொண்டை அரிப்பு

ஆஸ்துமா தாக்குதலால் தொண்டை அரிப்பு பிரச்சனை ஏற்படலாம். இந்த சூழ்நிலையில், தொண்டை மற்றும் கன்னத்தில் அரிப்பு இருந்தால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது

சுவாச பிரச்சனை

ஆஸ்துமா தாக்குதலின் முக்கிய அறிகுறியாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதும் அமையும். இந்த சமயத்தில் தசைகள் வீக்கமடையலாம். இதன் காரணமாக மூச்சுக்குழாய் அடைக்கப்படுகிறது

மனம் அலைபாயுதல்

அதிகரித்த மன அழுத்தம் அல்லது அமைதியாக இருப்பது போன்ற மனநிலை மாற்றங்கள் ஏற்படுவது ஆஸ்துமா தாக்குதலின் அறிகுறியாகக் கருதப்படுகிறது. எனவே இந்த அறிகுறி இருப்பின், இதைப் புறக்கணிக்கக் கூடாது

நீலநிற உதடுகள்

உடலுக்குத் தேவையான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காத போது, உதடுகள் நீல நிறமாக மாறத் தொடங்கலாம். இந்த சூழ்நிலையில் உடனடியாக மருத்துவரை பரிசோதிப்பது நல்லது

ஆஸ்துமா தாக்குதலுக்கு முன் உடல் இந்த அறிகுறிகளை ஏற்படுத்தலாம். எனவே இந்த அறிகுறிகளை உணர்ந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது