உஷார்! இந்த அறிகுறி எல்லாம் இருந்தா மூளைக்கட்டி இருக்குனு அர்த்தமாம்.!

By Gowthami Subramani
07 Dec 2023, 11:32 IST

மூளைக்கட்டி

மூளையில் உயிரணுக்களில் ஏற்படும் அசாதாரண வளர்ச்சியால் கட்டி உருவாகிறது. இவை வீரியம் மிக்க அல்லது புற்றுநோய் கட்டிகளாகவோ அல்லது வீரியம் அல்லாத தீங்கற்ற கட்டிகளாகவோ இருக்கலாம்

அறிகுறிகள்

மூளைக்கட்டியின் அறிகுறிகள் நபருக்கு நபர் வேறுபடும். லேசானது முதல் பெரிதானது வரை இருக்கலாம். இந்த அறிகுறிகளை எல்லா நோயாளிகளும் உணர்வதில்லை. இதன் அறிகுறிகளானது மூளையில் உள்ள கட்டியின் இருப்பிடத்தைப் பொறுத்தே அமையும்

வலிப்பு

மூளைக்கட்டி இருப்பவர்களுக்கு, நியூரான்கள் கட்டுப்பாடில்லாமல், அசாதாரண உடல் இயக்கங்களை ஏற்படுத்தலாம். இவை உடலின் ஒரு பகுதி அல்லது முழு உடலையும் பாதிக்கலாம்

மயக்கம்

சிறுமூளையில் ஏற்படும் கட்டிகளால், சமநிலை இழப்பு ஏற்படும். இது சிலசமயங்களில் மயக்கம், தலைசுற்றல் போன்றவற்றை ஏற்படுத்தும்

வாந்தி, குமட்டல்

இரைப்பைத் தொல்லையில் காரணமாக வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்படலாம். எனினும் இவை தொடர்ந்து நீடித்தால், அவை மூளையைச் சுற்றியுள்ள எடிமாவால் ஏற்படலாம்

தலைவலி

கட்டி ஏற்பட்ட பகுதியைச் சுற்றி அதிக நாள்கள் தலைவலி உண்டாகும். கட்டி உள்ள பகுதிக்கு அருகில் வீக்கத்தால், சுற்றியுள்ள திசுக்களில் அழுத்தம் உண்டாகலாம். இதனால் ஏற்படும் தலைவலி கடுமையானதாக இருக்கலாம்

பார்வைக் கோளாறு

மூளைக்கட்டியின் அறிகுறிகளில் பார்வைக் கோளாறும் அடங்கும். இதில் மங்கலான பார்வை, பகுதி அல்லது முழுமையான பார்வை இழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்

காது கேளாமை

காது நரம்புகளில் உள்ள ஒலி நரம்பு மண்டலத்தில் கட்டிகள் ஏற்படுவது காது கேளாமை அல்லது காதில் சத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்

கை, கால்கள் பலவீனம்

தொடுதல், அழுத்தம், பலவீனம், கை, கால்களின் இயக்கம் குறைவது போன்றவை மூளைக்கட்டியின் அறிகுறிகளாகும். முகம் பலவீனமடைவதுடன், விழுங்குவதில் சிரமம் போன்றவை ஏற்படலாம்

நினைவாற்றல் இழப்பு

மூளையில் டெம்போரல் லோபில் கட்டிகள் உண்டாவதால், மறதி, குழப்பம், பேச்சில் மாற்றங்கள் போன்றவை ஏற்படும். இதில் சில சூழ்நிலைகளில் செயலற்றவர்களாக மாறும் சூழல் ஏற்படும்