சுட்டெரிக்கும் வெயிலிலும் கூட வெந்நீரில் குளிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நம்பப்படுகிறது. இருப்பினும், இந்தப் பழக்கம் ஆரோக்கியத்திற்கு நல்லதா? அதன் விளைவு என்ன? என்பது குறித்து அறிந்து கொள்ளுங்கள்.
உயர் இரத்த அழுத்தம்
கோடையில் சூடான குளியல் உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். வெந்நீர் உடல் வெப்பநிலையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. இது இரத்த ஓட்ட பிரச்சனைகள் மற்றும் இதய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
கொளுத்தும் வெயிலில் உங்கள் சருமத்தைப் பராமரிப்பது கடினம். குறிப்பாக சூடான நீரில் குளிப்பது சருமத்தை மேலும் சேதப்படுத்தும். வெந்நீரில் குளிப்பதால் சருமத்தில் உள்ள கெரட்டின் செல்கள் சேதமடையும். அதன் இயற்கையான ஈரப்பதம் குறைகிறது.
வறண்ட சருமம்
சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்கள் சருமப் பிரச்சினைகளிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல் எரிச்சலையும் குறைக்கின்றன. கோடையில் வெந்நீரில் குளிப்பதால் சருமத்தின் இயற்கை எண்ணெய் பசை நீங்கி சருமம் வறண்டு போகும்.
இதயப் பிரச்சனைகள்
கோடையில் சூடான நீரில் குளிப்பது இதய நோய் உள்ளவர்களுக்கு மிகவும் ஆபத்தானது. கோடைக்காலத்தில் வெந்நீரில் குளிப்பதால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். இது இதய செயல்பாட்டையும் பாதிக்கிறது. இது மார்பு இறுக்கம் மற்றும் இதய செயலிழப்புக்கு வழிவகுக்கிறது.
முடி சேதம்
கோடையில் முடி பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பருவத்தில் வெந்நீரில் குளிப்பதால் முடியில் உள்ள ஈரப்பதம் குறைந்து, முடி உதிர்தல், பொடுகு, நரைத்தல் மற்றும் வறட்சி போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும்.
சருமப் பிரச்சினைகள் அதிகரிக்கும்
கோடையில் வெந்நீரில் குளிப்பதால் தடிப்புகள், சரும ஒவ்வாமை மற்றும் முகப்பருக்கள் ஏற்படும். குறிப்பாக கோடை காலத்தில் அடிக்கடி வெந்நீரில் குளிப்பவர்களுக்கு தோல் எரிச்சல், அரிப்பு போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.