கோடைக்காலம் தொடங்கி விட்டால், வெப்பம் அதிகரிக்கும் வேகத்தில் இரவு முழுவதும் ஏர் கண்டிஷனர்களில் தூங்குவது சாதாரணமாகிவிட்டது. ஆனால், இது சிக்கல்களைக் கொண்டு வரும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதில் ஏசியில் இருப்பதால் என்னென்ன உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் என்பதைக் காணலாம்
சுவாசப் பிரச்சனைகள்
ஏசியின் குளிர்ச்சியைப் பராமரிக்க அனைத்து ஜன்னல்கள் மற்றும் கதவுகளையும் மூடி வைப்போம். இதனால், புதிய காற்று உள்ளே வர முடியாமல், உட்புற காற்று மாசுபடுத்திகள் வளர அனுமதிக்கிறது. பிறகு, இவை சுவாசத்தின் மூலம் உடலுக்குள் நுழைந்து, சுவாசம் தொடர்பான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது
வறண்ட கண்கள்
ஏசி காரணமாக அறையின் ஈரப்பதம் போய்விடலாம். இதனால், காற்று மிகவும் வறண்டு போகிறது. இதன் காரணமாக, ஒருவர் காலையில் எழுந்ததும் கண்களில் வறட்சி மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்
வறட்டு இருமல்
அறையில் ஏசி காற்று மற்றும் ஈரப்பதம் இல்லாததன் காரணமாக சுவாசக் குழாய் எரிச்சலடையலாம். இது வறட்டு இருமல் பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். இருமல் இருந்தாலும், ஏசியில் தொடர்ந்து தூங்கினால் மருத்துவ உதவியை நாடுவது அவசியமாகும்
ஆஸ்துமா அபாயம்
ஏற்கனவே ஆஸ்துமா அல்லது சுவாச ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஏசி-யில் தூங்குவதால், அவர்களின் நிலை மேலும் மோசமாகலாம்
வறண்ட சருமம்
தொடர்ந்து ஏழு முதல் எட்டு மணி நேரம் ஏசியில் தூங்குவது சருமத்தின் ஈரப்பதத்தை பாதிக்கிறது. இதன் காரணமாக, வறண்ட சரும பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது
உடல் வெப்பநிலை பாதிப்பு
வெளிப்புற வானிலைக்கு ஏற்ப உடல் தானே வெப்பநிலையைக் கட்டுப்படுத்துகிறது. ஆனால், ஒருவர் அதிக நேரம் ஏசியில் தூங்கினால் இந்த திறன் பாதிக்கப்பட்டு, ஏசிக்கு வெளியே இருக்கும்போது உடலின் மைய வெப்பநிலை ஒழுங்குமுறை சரியாக வேலை செய்யாது
குறிப்பு
இதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் இணையத்தில் கிடைக்கும் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டதாகும். ஏசி-யில் தூங்குவதால் இந்த உடல் நல பிரச்சனைகள் அல்லது வேறு சில உடல்நல பிரச்சனைகளைச் சந்தித்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது