நம்மில் பலரும் அடிக்கடி சொடக்கு எடுப்பதை வழக்கமாக்கிக் கொள்கின்றனர். இதை நெட்டை எடுப்பது என்றும் கூறுகின்றனர். ஆனால், இதை அடிக்கடி செய்வது நல்லதா? கெட்டதா? என்பதை இங்கு காணலாம்
மக்களின் விருப்பம்
சொடக்கு எடுக்கையில் வரும் சத்தத்தை கேட்க தான் பலரும் செய்வதாக ஆய்வுகளில் கூறப்படுகிறது. அதே போல, சிலர் சொடக்கு எடுப்பதன் மூலம் உடலில் கவலை, சோர்வு குறைவதாக நம்புகின்றனர். இது நாளடைவில் அவர்களுக்கு பழக்கமாக மாறிவிடுகிறது
சத்தம் வருவது எப்படி?
பொதுவாக விரல் எலும்புகளின் இணைப்புகளுக்கு இடையே, சைனோவியல் என்ற திரவம் சுரக்கும். இந்நிலையில் சொடக்கு எடுக்கும் போது எலும்பு இணைப்புகள் விரிவடைவதால், அங்குள்ள திரவம் வேகமாக நகர்கிறது. இது சத்தமாக வெளிப்படுகிறது. இது பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்
வலி அதிகரிக்குமா? குறையுமா?
சொடக்கு எடுக்கும் போது வலி குறைவதாக பலரும் நினைக்கின்றனர். ஆனால் இது தவறு. உண்மையில், தொடர்ச்சியாக சொடக்கு எடுப்பது மணிக்கட்டு மற்றும் விரல்களில் அதிக வலி ஏற்பட வழிவகுக்கலாம்
பலவீனமடைதல்
அடிக்கடி சொடக்கு எடுக்கும் பழக்கம் காரணமாக விரல் இணைப்புகளின் இடையே குழிகள் உருவாகலாம். இது கைபிடிமானத்தில் ஏற்படும் வலுவைக் குறைத்து விடலாம்
வீக்கம் ஏற்படுவது
சொடக்கு எடுக்கும் போது விரல் அல்லது உள்ளங்கையைத் தொடர்ச்சியாக வளைக்கின்றனர். இது வீக்கம் ஏற்பட வழிவகுக்கிறது
நரம்புத்தளர்ச்சி
நெட்டை எடுக்கும் போது கைவிரல்களில் அழுத்தம் தருகிறோம். இதன் காரணமாக நரம்புத்தளர்ச்சி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இந்த பழக்கம் தீவிரமானால், விரல் இணைப்புகளை சுற்றியுள்ள சதைகளில் பாதிப்பு ஏற்படலாம்
குறிப்பு
சொடக்கு போடுவது ரிலாக்ஸ் உணர்வைத் தருவதாக இருப்பினும், இதை தினந்தோறும் செய்வதால் பல்வேறு பிரச்சனைகள் எழக்கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்