நரம்பு மண்டலத்தின் வழியாக மின் தூண்டுதல்களை எடுத்துச் செல்ல முடியாதபோது உணர்வின்மை மற்றும் கூச்ச உணர்வு ஏற்படலாம். இது பல்வேறு காரணங்களால் ஏற்படக்கூடியதாகும். இதில் அடிக்கடி மரத்துப் போகுதல் மற்றும் கூச்ச உணர்வுக்கான காரணங்களைக் காணலாம்
வைட்டமின் குறைபாடு
உடலில் தொற்றுக்களைத் தடுப்பது மட்டுமல்லாமல் நரம்பு ஆரோக்கியத்தைப் பராமரிப்பது வரை பல்வேறு செயல்பாடுகளுக்கு வைட்டமின்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே வைட்டமின் குறைபாடு காரணமாகக் கூட உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு போன்றவை ஏற்படலாம்
ஹைப்போ தைராய்டிசம்
பொதுவாக நீண்டகால ஹைப்போ தைராய்டிசம் நரம்புகளுக்கு சேதத்தை ஏற்படுத்தி உணர்வின்மை மற்றும் கூச்சத்தை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது
நீரிழிவு நோய்
உடலில் இரத்த சர்க்கரை அதிகளவு இருப்பதால் நரம்புகள் சேதப்படுத்தப்படலாம். இதனால், நரம்புகள் உடலின் வெவ்வேறு பாகங்களுக்கு செய்திகளை அனுப்புவதில் சிரமப்படலாம். நீரிழிவு நோயாளிகள் அனைவருக்கும் இந்த அறிகுறி இல்லை எனினும், உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வை எதிர்கொள்வது பொதுவானதாகும்
லைம் நோய்
லைம் நோய் உண்ணி மூலம் பரவக்கூடிய மிகவும் அரிதான நோயாகும். இது காய்ச்சல், தலைவலி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இது பொதுவாக உணர்வின்மை மற்றும் கூச்ச உணர்வை ஏற்படுத்துகிறது
தவறான தோரணை
தவறான தோராணை பெரும்பாலான நேரத்தில் மரத்துப் போதல் அல்லது கூச்ச உணர்வை ஏற்படுத்தலாம். ஒரே நிலையை நீண்ட நேரம் பராமரிப்பதால் தூங்குவது போன்ற உணர்வை ஏற்படுத்தலாம்.எனவே நல்ல தோரணையைப் பராமரிப்பதன் மூலம் நரம்புகள் சுருக்கப்படாமல் அல்லது சேதமடையாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்