கழுத்து வலி 5 நிமிடத்தில் காணாமல் போக இதை பண்ணுங்க!

By Karthick M
17 Apr 2024, 00:55 IST

கழுத்து வலி குணமாக

டிஜிட்டல் யுகத்தில் பல வேலைகளை உட்கார்ந்த இடத்திலேயே மேற்கொள்கிறோம். இதனால் கழுத்து வலி பிரச்சனை ஏற்படுகிறது. இதை உடனடியாக சரிசெய்ய உதவும் வழிகளை பார்க்கலாம்.

இஞ்சி உடனடி நிவாரணி

இஞ்சியில் நல்ல அளவு அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இஞ்சி துண்டுகளை சிறு துண்டுகளா நறுக்கி 2 கப் தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து குடித்து வர கழுத்து வலி காணாமல் போகும்.

கல் உப்பு

கழுத்து வலியில் இருந்து நிவாரணம் பெற கல் உப்பை பயன்படுத்தலாம். வெதுவெதுப்பான நீரில் கல் உப்பை கலந்து குளிக்கவும் அல்லது 15 நிமிடம் இந்த நீர் தொட்டியில் உட்காரவும். இதனால் கழுத்து வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

கழுத்து வலி உடற்பயிற்சி

கழுத்து வலியில் இருந்து நிவாரணம் பெற கழுத்தை நேராக வைத்துக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்து கழுத்தை வலமிருந்து இடமாக மெதுவாக சுழற்றவும்.

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஆப்பிள் வினிகரில் காணப்படுகின்றன. ஆப்பிள் சிடர் வினிகரை ஒரு துணியில் போட்டு அதை பிழிந்து கழுத்தில் தடவவும். இது கழுத்து வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

மசாஜ்

கழுத்து வலியில் இருந்து நிவாரணம் பெற நீங்கள் கடுகு எண்ணெய் அல்லது லாவெண்டர் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம். இது கழுத்து தசைகளை தளர்த்தி வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்.