ஒரே எண்ணெயை அடிக்கடி பயன்படுத்தி சமைப்பதால் ஏற்படும் தீமைகள்!

By Karthick M
20 Apr 2024, 22:02 IST

சமையல் எண்ணெய் டிப்ஸ்

சமையல் என்றால் அதில் பிரதானமாக இடம்பெறுவது எண்ணெய் தான். எண்ணெயை தவிர்த்த உணவுகள் என்பது சிரமம் தான் என்றாலும் ஒரே எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்தவதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன தெரியுமா?

மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் எண்ணெய்

ஒரே எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் எண்ணெயின் வேதியியல் அமைப்பில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது எண்ணெயில் உள்ள டிரான்ஸ் கொழுப்பை அதிகரிக்கிறது. இது ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும்.

புற்றுநோய் ஆபத்து

அடிக்கடி எண்ணெயை பயன்படுத்துவதால் அதில் உள்ள கார்சினோஜென் அளவு அதிகரிக்கிறது. இது உடலில் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும்

டிரான்ஸ் கொழுப்பை அதிகம் சாப்பிட்டால் உங்கள் தமனிகளிகளில் பிளேக் குவிவதற்கு வழிவகுக்கிறது. இது மாரடைப்பை ஏற்படுத்தும். குறிப்பாக இதய நோயாளிகள் இதை தொடவேக் கூடாது.

முழுமையாக படித்ததற்கு நன்றி

அதேபோல் கணையத்தின் செயல்பாட்டை குறைப்பதால் சர்க்கரை நோய் பாதிப்பை ஏற்படுத்தலாம். மேலும் இந்த வகை எண்ணெய் உடல் வீக்கத்தை அதிகரிக்கும். இப்படி பல வகை பிரச்சனைகள் எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் வரலாம்.