மழைக்காலத்தில் நோய்த்தொற்றுக்களின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். குறிப்பாக அதிக ஈரப்பதம் காரணமாக காற்று, தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளுக்கு மிகவும் உகந்ததாக மாறுகிறது. மேலும் கொசுக்கள் இனப்பருக்கம் செய்வதற்கும் காரணமாக அமைகிறது. இதில் மழைக்காலத்தில் பரவும் பொதுவான நோய்களைக் காணலாம்
சிக்கன்குன்யா
பருவமழை நோய்த்தொற்றுக்களில் ஒன்றாக சிக்கன்குன்யாவும் அமைகிறது. இதில் நோயாளிக்கு மூட்டுகளில் கடுமையான வலி, அதிக காய்ச்சல், குளிர் மற்றும் கடுமையான உடல்வலி போன்றவற்றால் அவதிப்படுகின்றனர்
டெங்கு
பெண் ஏடிஸ் கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. இதனால் அதிக காய்ச்சல், தலைவலி, குமட்டல், வாந்தி, உடல்வலி, சோர்வு மற்றும் இரத்த அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால், ஒரு நபரின் பிளேட்லெட் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படலாம்
செரிமான பிரச்சனை
மழைக்காலங்களில் அடிக்கடி அசுத்தமான நீர் அருந்துவது வயிற்றில் தொற்று நோய்களுக்கு வழிவகுக்கலாம். இதனால் வயிற்று வலி, குமட்டல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்
மலேரியா
இது கொசுவினால் ஏற்படக்கூடிய நோயாகும். இது அதிக வியர்வை, உடல் குளிர்ச்சி, அதிக காய்ச்சல் மற்றும் சில நேரங்களில் இரத்த சோகை பிரச்சனை கூட ஏற்படலாம்
டைபாய்டு
மழைக்காலத்தில் ஏற்படும் தொற்று நோய்களில் ஒன்று டைபாய்டு ஆகும். இது அசுத்தமான உணவு அல்லது தண்ணீரால் பரவுகிறது. இதனால் காய்ச்சல், நெரிசல் மற்றும் தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது
தடுக்கும் முறைகள்
தொற்றுநோயைத் தடுக்க உதவும் முதல் படியாக அமைவது தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிப்பதாகும். அதன் படி, கைகளைத் தவறாமல் கழுவுதல், சானிடைசர் பயன்பாடு, முகமூடி அணிவது போன்றவற்றை மேற்கொள்ளலாம்
ஆரோக்கியமான உணவுமுறை
ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வதன் மூலம் நோய்த்தொற்றுக்களைத் தவிர்க்கலாம். அதே போல, அதிக எண்ணெய், காரமான உணவைத் தவிர்க்க வேண்டும். அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்
இது தவிர தடுப்பூசி செலுத்துதல், தேவைப்பட்டால் மருத்துவரை அணுகுதல், வீட்டில் கொசு விரட்டிகள், கிரீம்கள் பயன்படுத்துதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மழைக்காலங்களில் ஏற்படும் நோய்த்தொற்றைத் தவிர்க்க உதவுகிறது