இது உங்க சிறுநீரகத்தின் வில்லன்; விஷத்திற்கு சமம்!

By Kanimozhi Pannerselvam
02 Oct 2024, 16:00 IST

வெயில் கொழுத்தும் தருணங்களில் தண்ணீருக்கு பதிலாக குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்த கூல்ட்ரிங்ஸ் அல்லது எனர்ஜி பானங்களை பருவது மிகவும் ஆபத்தானது. இந்த பழக்கம் அவர்களை அறியாமலேயே சிறுநீரகங்களைக் கடுமையாக பாதிக்கிறது.

மருத்துவர்களின் கூற்றுப்படி, 20 முதல் 30 வயதுடைய சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் 30 சதவீதம் அதிகரித்து வருகிறது. பாதி பேர் டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோடா, எனர்ஜி பானங்கள் போன்ற கார்பனேற்றப்பட்ட பானங்களை தொடர்ந்து உட்கொள்வது சிறுநீரக கற்கள் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு வழிவகுக்கும்.

நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குளிர் பானங்கள் குடிப்பதால் நாள்பட்ட சிறுநீரக நோயின் அபாயம் 2-3 மடங்கு அதிகரிக்கும் என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், இந்த கோலாவில் செயற்கை இனிப்புகள் இருப்பதால் சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம். சர்க்கரை-இனிப்பு கொண்ட கோலா மற்றும் கோலா அல்லாத இரண்டும் சிறுநீரக கற்கள் அதிகரிக்கும் அபாயத்துடன் தொடர்புடையவை.

ஒரு நாளுக்கு பல டயட் சோடாக்களை அருந்திய பெண்களுக்கு 20 ஆண்டுகளில் சிறுநீரக செயல்பாட்டில் 30 சதவீதம் அதிக சரிவு இருப்பதாகவும் ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.