ஸ்மார்ட்போன் நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. ஸ்மார்ட்போன் பல தீமைகளை ஏற்படுத்தினாலும் இதய பாதிப்பு வருமா என்பது குறித்து பார்க்கலாம்.
சாப்பிடும் போது ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்தும்போது, மனதளவில் சாப்பிட முடிவதில்லை. பல சமயங்களில் ஸ்மார்ட்போனைப் பார்த்துக்கொண்டே அதிக உணவை உண்கிறோம்.
அதிகமாக சாப்பிடுவதால் உடல் பருமன் மற்றும் எடை அதிகரிப்பு பிரச்னை ஏற்படுகிறது. உடல் எடை அதிகரிக்கும் போது, இதயம் தொடர்பான பிரச்னைகள் கண்டிப்பாக ஏற்படும்.
ஸ்மார்ட்போன்களால் தூக்கம் பாதிக்கப்படும். சரியான தூக்கம் வராததாலும், சரியான நேரத்தில் தூங்கி எழாததாலும் இரத்த அழுத்தம் பிரச்னைகள் ஏற்படும், இது இதய பிரச்சனை ஆபத்து அதிகரிக்கிறது.
ஒவ்வொரு முறையும் உங்கள் ஸ்மார்ட்போனில் நோட்டிபிகேஷன்களைச் சரிபார்க்க கவலைப்படும்போது, உடலில் கார்டிசோலின் அளவு அதிகரிக்கிறது.
கார்டிசோல் ஹார்மோனின் அளவு அதிகரிப்பதால், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இது இதய பாதிப்பை ஏற்படுத்தும்.