சாப்பிடாமல் இருந்தால் கண் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா?

By Karthick M
27 Apr 2025, 23:11 IST

அடிக்கடி, நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்தால் கண்களில் பாதகமான விளைவுகள் ஏற்படலாம். சரியான உணவுப் பழக்கம் இல்லாததால், கண் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

நீண்ட நேரம் பசியுடன் இருந்தால், உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், கண்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது கண் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதிகப்படியான டிரான்ஸ் கொழுப்புகள், சர்க்கரை கண்களில் வீக்கத்தை ஏற்படுத்தும்.

உடலில் வைட்டமின் ஏ சத்து குறைவதால் கண் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. வைட்டமின்-ஏ குறைபாடு இரவில் குருட்டுத்தன்மை, பிற கண் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் குறைபாடும் கண்களில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. அக்ரூட் பருப்புகள், ஆளிவ் விதைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.