உடல் சோர்வு நீங்க டிப்ஸ்
இன்றைய வாழ்க்கை முறையில் அதிகமான நேரங்கள் நாம் பிசியாக இருக்கிறோம். இதனால் உடல் சோர்வு ஏற்படுகிறது. இதனால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. உடல் சோர்வை நீக்கி சுறுசுறுப்பாக இருக்க உதவும் பழக்கங்களை பார்க்கலாம்.
வாக்கிங் செல்லுங்கள்
அலுவலக நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது உங்கள் முதுகு விறைப்பாக இருக்கும். இதனால் உடல் ரீதியாக சோர்வடையலாம். இதை போக்க அவ்வப்போது சிறிது தூரம் நடந்து செல்லுங்கள்.
தண்ணீர் குடிக்கவும்
உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவும். சில சமயங்களில் இது குறைவதாலும் நீங்கள் சோர்வை உணரலாம். எனவே அவ்வப்போது தண்ணீர் குடிக்கவும்.
நல்ல உணவுமுறை அவசியம்
சோர்வு ஏற்படாமல் இருக்க ஆரோக்கியமான உணவு தேவை. காரணம் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் சோர்வு ஏற்படலாம்.
அதிகமாக சாப்பிட வேண்டாம்
நீங்கள் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதிக உணவை உட்கொள்வதால் செரிமானத்தில் சிரமம் ஏற்படுகிறது. இதன்காரணமாகவும் நீங்கள் சோர்வாக உணரலாம்.
முழுமையாக படித்ததற்கு நன்றி
முழுமையாக சோர்வை நீக்க போதுமான தூக்கம் மிக முக்கியம். உடல்நலம் தொடர்பான கூடுதல் தகவலுக்கு OnlyMyHealth உடன் இணைந்திருங்கள்.