அழற்சி பிரச்சனைக்கு உதவும் சிறந்த இயற்கை ஆன்டி ஹிஸ்டமைன்கள்

By Gowthami Subramani
03 Jun 2024, 17:30 IST

ஹிஸ்டமைன் என்பது கண் அரிப்பு, தொண்டை அரிப்பு மற்றும் தும்மல் போன்ற ஒவ்வாமை அறிகுறிகளைத் தூண்டும் ஒரு வகை புரதமாகும். இந்த விளைவுகளைத் தவிர்க்க ஆண்டிஹிஸ்டமின்கள் உதவுகிறது

ஆண்டிஹிஸ்டமின்கள்

ஆண்டிஹிஸ்டமின்களாக செயல்படும் இயற்கை உணவுகள் மற்றும் தாவர சாறுகளைப் பயன்படுத்துவது ஒவ்வாமை பிரச்சனைக்கு நிவாரணத்தைத் தருகிறது. இதில் ஒவ்வாமை சிகிச்சைக்கு உதவும் ஆண்டிஹிஸ்டமின்களைக் காணலாம்

வைட்டமின் சி

இது ஒரு இயற்கையான ஆண்டிஹிஸ்டமின்கள் ஆகும். இவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வைட்டமின் சியில் உள்ள அதிக அளவு ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஒவ்வாமை பிரச்சனைக்கு உதவுகிறது

புரோபயாடிக்குகள்

இது குடல் பாக்டீரியாவின் ஆரோக்கியமான சமநிலையை பராமரிக்க உடலுக்கு உதவுகிறது. இவை உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஒவ்வாமைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது

ப்ரோமிலைன்

இது அன்னாசிப்பழத்தின் சாறு மற்றும் மையத்தில் காணப்படும் ஒரு நொதியாகும். ப்ரோமிலைன் வீக்கம் அல்லது அழற்சிக்கு ஒரு பிரபலமான இயற்கைத் தீர்வாகும் குறிப்பாக காயம், சைனஸ் போன்றவற்றிற்கு ப்ரோமிலைன் உதவுகிறது

குவெர்செடின்

இது பல உணவுகள் மற்றும் தாவரங்களில் காணப்படக்கூடிய ஒரு ஆக்ஸிஜனேற்ற ஃபிளாவனாய்டு ஆகும். உணவில் குவெர்செடினைச் சேர்ப்பது ஒவ்வாமை அறிகுறிகளைப் போக்க உதவுகிறது

சிலோன் இலவங்கப்பட்டை

இது இயற்கையான ஆண்டிஹிஸ்டமைனாக செயல்பட்டு வீக்கம் மற்றும் நாசி எரிச்சலுக்கு நன்மை பயக்கும் விளைவுகளைத் தருகிறது. மேலும் இதன் சாறுகள் மூக்கின் வீக்கத்தைத் திறம்பட நீக்குகிறது