சரும அலர்ஜியிலிருந்து விடுபட இத ஃபாலோ பண்ணுங்க

By Gowthami Subramani
21 Jul 2024, 09:00 IST

மோசமான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பலரும் தோல் ஒவ்வாமையால் பாதிப்படைகின்றனர். இந்த சூழ்நிலையில் ஒவ்வாமையைக் குறைக்க உதவும் சில குறிப்புகளைக் காணலாம்

தண்ணீர் குடிப்பது

ஒவ்வாமை பிரச்சனையைத் தவிர்க்க முடிந்தவரை தண்ணீர் குடிப்பது அவசியமாகும். தண்ணீர் அருந்துவது சிறுநீர் மூலம் உடலில் இருந்து நச்சுப் பொருட்களை நீக்கி ஒவ்வாமை பிரச்சனையைக் குறைக்கிறது

தேங்காய் எண்ணெய்

அலர்ஜி குறைய இரவு தூங்கும் முன் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம். ஏனெனில், தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது

எலுமிச்சைச் சாறு

எலுமிச்சையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் ஒவ்வாமையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. இதற்கு எலுமிச்சைச் சாற்றை பருத்தியின் உதவியுடன் ஒவ்வாமை உள்ள இடத்தில் தடவ வேண்டும்

ஆலிவ் எண்ணெய்

அலர்ஜியிலிருந்து விடுபட ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம். அதன் படி, ஆலிவ் எண்ணெயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் ஒவ்வாமையைக் குறைக்க உதவுகிறது

தேன்

அலர்ஜியைக் குறைக்க தேன் ஒரு சிறந்த தேர்வாகப் பயன்படுகிறது. இதற்கு ஒரு ஸ்பூன் ஆப்பிள் வினிகரில் தேன் கலந்து ஒரு நாளைக்கு மூன்று முறை அலர்ஜி உள்ள இடத்தி தடவி வர, ஒவ்வாமையைக் குறைக்கலாம்

வேம்பு

வேப்பம்பழத்தில் உள்ள ஆன்டி- பாக்டீரியல் பண்புகள் சருமம் தொடர்பான பிரச்சனைகளைக் குறைக்கிறது. ஒவ்வாமையிலிருந்து விடுபட வேப்ப இலைகளை தண்ணீரில் 8 மணி நேரம் ஊற வைத்து, பின் அரைத்து சருமத்தில் தடவி 30 நிமிடம் வைக்கலாம். பின் சுத்தமான நீரில் கழுவலாம்

குறிப்பு

தோல் ஒவ்வாமைகளைக் குறைக்க இந்த முறைகள் உதவும். எனினும், பிரச்சனை தீவிரமாக இருப்பின் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது