தீராத பிரச்சனைகளைக் குணமாக்கும் அக்குபிரஷர் தெரபி

By Gowthami Subramani
14 Aug 2024, 16:00 IST

அக்குபிரஷர் மாற்று சிகிச்சையின் ஒரு வடிவம் ஆகும். உடலில் ஆற்றல் கோடுகளாகக் கருதப்படும் குறிப்பிட்ட புள்ளிகளைத் தூண்டுவதற்கு இந்த கைமுறை அழுத்தம் பயன்படுத்தப்படுகிறது. இதில் அக்குபிரஷர் தெரபி தரும் நன்மைகளைக் காணலாம்

தசைகள் தளர்வடைய

அக்குபிரஷர் செய்வது தசைகள் மற்றும் மூட்டுகளை தளர்த்தவும், சிறந்த ஆழ்ந்த தளர்வு நிலைகளை ஊக்குவிக்கவும் உதவும்

வலி நிவாரணத்திற்கு

தலைவலி, முதுகுவலி, கழுத்து வலி மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படும் வலிகளைப் போக்குவதற்கு அக்குபிரஷர் உதவுகிறது. மேலும் நாள்பட்ட வலி, கீல்வாதம் போன்றவற்றிற்கும் உதவுகிறது

வேகமாக குணமாக்க

அக்குபிரஷர் செய்வது சேதமடைந்த திசுக்களுக்கு அதிக ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்க அனுமதிக்கிறது. இது குணப்படுத்துவதற்கும் உதவுகிறது

மேம்பட்ட தூக்கத்திற்கு

அக்குபிரஷர் மசாஜ் செய்வது தூக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. இது பதட்டம், நாள்பட்ட வலி அல்லது மனச்சோர்வு போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும்

செரிமான மேம்பாட்டிற்கு

அக்குபிரஷர் மசாஜ் தெரபி செரிமான பிரச்சனைகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது

முடி ஆரோக்கியத்திற்கு

மயிர்க்கால்களுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முடி உதிர்வைக் குறைக்கவும் அக்குபிரஷர் உதவுகிறது. மேலும் பொடுகு, வறட்சி போன்ற உச்சந்தலையின் நிலைகளுக்கு உதவுகிறது

மன அழுத்தம் நீங்க

அக்குபிரஷர் பதட்டம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது மனநிலையை மேம்படுத்தி மற்றும் சோர்வைக் குறைக்கலாம்