அன்றாட வாழ்வில் நாம் மேற்கொள்ளும் சில பழக்கங்கள் மூளை ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன. இதில் மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாக்க என்னென்ன விஷயங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதைக் காணலாம்
ஆரோக்கியமற்ற உணவுமுறை
அதிக சர்க்கரை சாப்பிடுவது அல்லது நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவது ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கலாம். மேலும், மூளை வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது
காலை உணவு சாப்பிடாமல் இருப்பது
நல்ல மற்றும் சத்தான காலை உணவை சாப்பிடுவது மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. ஆனால் காலை உணவை சாப்பிடாமல் இருப்பது மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கிறது
குறைந்த உடல் செயல்பாடு
உடல் செயல்பாடு இல்லாததன் காரணமாக மூளைக்கு இரத்த ஓட்டம் குறைகிறது. இது அறிவாற்றல் திறன்கள் மற்றும் நினைவாற்றல் இழப்புக்கு வழிவகுக்கலாம்
தூக்கமின்மை
போதுமான தூக்கம் இல்லாததன் காரணமாக பகுத்தறிவு, நினைவாற்றல் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன் போன்ற அறிவாற்றல் திறன்களை பலவீனப்படுத்தும் சூழ்நிலை உண்டாகலாம்
ஹெட்ஃபோன்கள்
ஹெட்ஃபோன்களில் அதிக ஒலியில் இசையைக் கேட்பதால் செவித்திறன் பாதிப்படையலாம். இது டிமென்ஷியாவுக்கு வழிவகுக்கலாம்
அதிக திரை பயன்பாடு
அதிகப்படியான திரை பயன்பாட்டின் காரணமாக மன தூண்டுதலைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் செயலற்ற வாழ்க்கை முறையை ஊக்குவிக்கிறது
மன ஆரோக்கியம்
பதட்டம், மன அழுத்தம் மற்றும் ஓய்வு இல்லாமை போன்ற பல்வேறு மனநலப் பிரச்சனைகளைப் புறக்கணிப்பது காலப்போக்கில் மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கலாம்