காலை எழுந்தவுடன் பலரும் தங்கள் தினத்தை டீ உடன்தான் தொடங்குகிறார்கள். ஆனால் இதன் பக்கவிளைவுகளை பலரும் அறிந்திருப்பதில்லை.
டீயில் உள்ள டானின்கள் மற்றும் காஃபின் போன்றவை இரைப்பை அமில உற்பத்தியை அதிகரிக்கும்.
வயிற்றில் உணவு இல்லாமல் இருப்பது அதிகப்படியான அமிலம் இருப்பது எரிச்சலை ஏற்படுத்துகிறது. இரைப்பை அழற்சி அல்லது புண்களை ஏற்படுத்தும்.
வெறும் வயிற்றில் தேநீரை உட்கொள்வதால் அதில் நிறைந்துள்ள இயற்கையான கலவைகள் செரிமான செயல்முறைகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
கவலை மற்றும் நடுக்கம், நீரிழப்பு, இரத்த சர்க்கரை அளவு பாதிப்பு, வயிற்றில் அமிலத்தன்மை பிரச்சனை ஆகியவை ஏற்படலாம். எனவே இதை கவனத்தில் கொள்ளவும்.