இன்று பலரும் நல்ல தூக்கத்தைப் பெறுவதில் சிரமமடைகின்றனர். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இதில் இயற்கையாகவே நல்ல தூக்கத்தைப் பெற உதவும் சில குறிப்புகளைக் காணலாம்
லேசான யோகா ஆசனங்கள்
யோகா அல்லது தியானம் போன்ற 10 நிமிட லேசான பயிற்சிகள் செய்வது மன அழுத்தத்தைக் குறைத்து, மனதை ரிலாக்ஸாக வைக்க உதவுகிறது. இதன் மூலம் நல்ல தூக்கத்தைப் பெறலாம்
மூலிகை தேநீர் குடிப்பது
சில மூலிகை தேநீர்களின் உதவியுடன் தூக்கத்தை மேம்படுத்தலாம். இதற்கு படுக்கைக்குச் செல்வதற்கு முன் கெமோமில், லாவெண்டர் அல்லது துளசி தேநீர் போன்றவற்றைக் குடிக்கலாம். இது நரம்பு மண்டலத்தை தளர்த்தி, நன்றாக தூங்க உதவுகிறது
திரை நேரத்தை வரம்பிடுவது
தூங்குவதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பாக மடிக்கணினி, தொலைபேசி அல்லது தொலைக்காட்சியைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இதிலிருந்து வெளியேறும் நீல ஒளி மெலடோனின் வெளியீட்டைத் தாமதப்படுத்துவதால் தூக்கத்தைப் பாதிக்கலாம்
வசதியான சூழ்நிலையை உருவாக்குதல்
அறையை குளிர்ச்சியாகவும், இருட்டாகவும், அமைதியாகவும் வைத்திருக்க வேண்டும். மனதை நிம்மதியாகவும் சிறப்பாகவும் வைப்பதற்கு அறையில் ரோஜா, லாவண்டர் போன்ற வாசனைகளைப் பரப்பலாம்
தூக்கம், விழித்தெழும் நேரத்தை அமைப்பது
ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் தூங்கச் சென்று எழுந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். வார இறுதி நாள்களில் வழக்கமான வழக்கத்தைப் பின்பற்றுவது அவசியம். நல்ல தூக்க வழக்கத்தைக் கையாள்வது நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது
குறிப்பு
மாலை 4 மணிக்குப் பிறகு காஃபின் உட்கொள்வது, இரவில் தாமதமாக அதிக உணவு உட்கொள்வது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். காலை மற்றும் மாலையில் லேசான உணவு உட்கொள்வது சிறந்த தூக்கத்திற்கு உதவுகிறது
நீண்ட நாள் இருந்தால்
இந்த தூக்க பிரச்சனைகளை நீங்கள் 2 வாரங்களுக்கு மேல் சந்தித்தால், அது வேறு சில உடல்நலப் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். இந்த சூழ்நிலையில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்