காலையில் எழும் போது சூரிய ஒளி கிடைக்கப் பெறுவது மிகவும் அவசியமாகும். தினமும் ஏன் சூரிய ஒளியைப் பெற வேண்டும் என்பது குறித்து காணலாம்
சர்க்காடியன் ரிதம்
சூரிய ஒளி உடலின் தூக்க-விழிப்பு சுழற்சியை மீட்டமைத்து, தூக்கத்தின் தரம் மற்றும் பகல்நேர விழிப்புணர்வை மேம்படுத்துகிறது
செரடோனின் வெளியீடு
சூரிய ஒளி செரோடோனின் வெளியீட்டைத் தூண்டுவதன் மூலம் ஆரோக்கியமான மனநிலை மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துகிறது
வைட்டமின் டி
சூரிய ஒளியின் மூலம் உடலில் வைட்டமின் டி-யை உற்பத்தி செய்ய முடியும். இவை நோயெதிர்ப்பு மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.
அறிவாற்றல் திறனுக்கு
காலையில் சூரிய ஒளி பெறுவதன் மூலம் அறிவாற்றல் செயல்திறன் மற்றும் கவனத்தை அதிகரிக்க முடியும்
தூக்க முறைகள்
சூரியஒளி வெளிப்பாட்டின் மூலம் சீரான தூக்க முறைகளைக் கையாள்வது மற்றும் இரவில் நல்ல மற்றும் சிறந்த தூக்கம் பெற உதவுகிறது
மனநிலை மேம்பாடு
காலை சூரிய ஒளி மனநிலையை மேம்படுத்தவும், மனச்சோர்வு, பதட்டம் போன்ற அறிகுறிகளைக் குறைக்கவும் உதவுகிறது
ஒட்டுமொத்த ஆரோக்கியம்
காலையில் சூரிய ஒளியைப் பெறுவதன் மூலம் உடலுக்குப் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். எனினும், சூரிய ஒளியைப் பாதுகாப்பான முறையில் பெற்றுக் கொள்வது நல்லது