காதலர் தினத்துக்கு காதலருக்கு என்ன கிஃப்ட் வாங்கறதுனு குழப்பமா இருக்கா? இந்த பதிவில் சில ஐடியாவை நாங்கள் பகிர்ந்துள்ளோம்.
மோதிரம்
அனைவராலும் விரும்பப்படும் ஒரு அன்பு பரிசாக மோதிரம் திகழ்கிறது. தனது காதலை வெளிப்படுத்த இதற்கு நிகர் எதுவும் இல்லை என்பது தான் உண்மை.
பர்ஸ்
ஆண்களுக்கு பர்ஸ் முக்கியமான ஒன்று. பல ஆண்டுகள் ஆனாலும் பர்சை பத்திரமாக வைத்திருப்பர். இது ஒரு அழகான பரிசாக இருக்கும்.
ஸ்மார்ட்வாட்ச்
உங்கள் காதலருக்கு ஸ்மார்ட்வாட்ச் வாங்கி கொடுங்க. இது அவர்களது ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலம் அவர்களின் ஆரோக்கியத்தை கண்காணித்துக்கொள்ள முடியும்.
ஒயின்
உங்கள் காதலருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தால், ஒயின் வாங்கிக் கொடுக்கவும். இது அவர்களை மகிழச் செய்யும்.
புத்தகம்
சிலருக்கு புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். அத்தகையவர்களுக்கு அவர்கள் விரும்பும் எழுத்தாளரின் புத்தகத்தை வாங்கிக்கொடுக்கவும்.