ஒரு அழகான காலை நம் முழு நாளையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். காலையில் எழும்போதே நாம் சோம்பேறியாக உணர்ந்தால் அன்றைய தினம் நம்மை நமக்கு நன்றாகவே இருக்காது. ஒவ்வொரு நாளும் நன்றாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க காலையில் எழுந்தவுடன் சில வேலைகளை தவறுதலாக கூட செய்யக்கூடாது. அவற்றை பற்றி பார்க்கலாம்.
முழிப்பு தட்டியதும் படுக்கையை விட்டு எழவும்
சிலர் காலையில் எழுந்ததும் அங்கும் இங்கும் புரண்டு படுத்துக் கொண்டே இருப்பார்கள். இதனால், உங்கள் உடலில் சோம்பல் அதிகரித்து, காலையில் சரியான நேரத்தில் எழுந்த பிறகும் புத்துணர்ச்சி ஏற்படாது. இந்த பழக்கமும் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
காபியை தவிர்க்கவும்
காபியை வெறும் வயிற்றில் குடிக்க கூடாது. ஏதாவது சாப்பிட்ட பிறகு அல்லது வேலையை ஆரம்பித்த பிறகு காபியை உட்கொள்ள வேண்டும். காலையில் எழுந்தவுடன் காபி குடிப்பதால் உடலில் கொழுப்பை அதிகரிக்கச் செய்யும் கார்டிசோல் என்ற ஹார்மோனின் அளவு அதிகரிக்கும்.
புகைபிடிக்க வேண்டாம்
சிலர் காலையில் எழுந்தவுடன் முதலில் புகைப்பிடித்துவிட்டு ப்ரெஷ் அப் செய்யச் செல்வார்கள். ஆனால், காலையில் எழுந்தவுடன் புகைபிடிப்பது மிகவும் தீங்கு விளைவிக்கும். இதன் காரணமாக, புற்றுநோய் வருவதற்கான ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது.
காரமான உணவு
காரமான வறுத்த உணவை காலையில் சாப்பிட கூடாது. நீங்கள் காலையில் லேசான மற்றும் சத்தான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இது வேலை செய்ய உங்களுக்கு ஆற்றலை வழங்கும்.
காலை உணவு முக்கியம்
நம்மில் பலர் வேலை, கல்லூரி, பள்ளிக்கு செல்லும் அவசரத்தில் காலை உணவை சாப்பிடாமல் அவசரமாக வீட்டை விட்டு ஓடுவோம். இது முற்றிலும் தவறு. இது உங்களை மிகவும் சோம்பேறியாக்கும். எனவே, காலை உணவை ஒருபோதும் தவறவிடக்கூடாது.
சண்டை வேண்டாம்
காலையில் யாருடனும் சண்டையிடுவதையோ, வாக்குவாதங்களையோ தவிர்க்க வேண்டும். காலையில் சண்டையிடுவது நாள் முழுவதும் மனநிலையை மோசமாக வைத்திருக்கும். இது உங்கள் வேலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
எதிர்மறையான பேச்சு
காலையில் எழுந்தவுடன் எதிர்மறையான எந்த விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டாம். இதனுடன், எதிர்மறையான விஷயங்களைப் பேசுவதையும் தவிர்க்கவும். இது உங்கள் முழு நாளையும் கெடுத்துவிடும்.