நல்ல கண்பார்வை பராமரிப்பிற்கு என்ன செய்ய வேண்டும்?

By Gowthami Subramani
27 Aug 2024, 09:38 IST

நல்ல கண் ஆரோக்கியத்திற்கு தினசரி வாழ்க்கையில் சில குறிப்புகளைப் பின்பற்றலாம். இதில் கண் பார்வை பராமரிப்புக்கு என்ன செய்யலாம் என்பது குறித்து காணலாம்

ஆரோக்கியமான உணவுகள்

அடர் பச்சை இலைக் காய்கறிகளான சார்ட் மற்றும் கேல் போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும். இது வயது தொடர்பான மாகுலர் சிதைவைத் தடுக்க உதவுகிறது. வைட்டமின் ஏ நிறைந்த ஆரஞ்சு, கேரட், பாகற்காய் மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்

வைட்டமின்கள்

கண் ஆரோக்கியத்திற்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி மற்றும் ஆளிவிதை எண்ணெய் போன்றவற்றை எடுத்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்

கண்களுக்கு ஓய்வு

நீண்ட நேர டிஜிட்டல் பயன்பாடு கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால் வறண்ட கண்கள், கண் சோர்வு, சிவப்பு கண்கள், மங்கலான பார்வை போன்றவை ஏற்படலாம். எனவே டிஜிட்டல் திரையிலிருந்து விலகி இருப்பது நல்லது

வெயிலிலிருந்து பாதுகாப்பது

கடுமையான வெயிலில் இருந்து கண்களை பாதுகாப்பது அவசியமாகும். குறிப்பாக சூரியனின் புற ஊதாக் கதிர்களிலிருந்து கண்களைப் பாதுகாப்பது முக்கியம். நல்ல சன்கிளாஸ் அணிந்து, தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது கூடுதல் பயனைத் தருகிறது

கண் பயிற்சி செய்வது

நீரிழிவு, அதிக கொழுப்பு உள்ளிட்ட கண் பிரச்சனைகளை ஏற்படுத்தும் பல்வேறு நிலைமைகளைத் தடுக்க அல்லது கட்டுப்படுத்த வழக்கமான கண் பயிற்சிகள் மேற்கொள்வது அவசியமாகும்

வழக்கமான கண் பரிசோதனை

விரிவான கண்பரிசோதனைகளைத் தவறாமல் மேற்கொள்வதன் மூலம் கண் சார்ந்த பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். இதன் மூலம் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு போன்றவை முன்கூட்டியே கண்டறியப்படுகிறது

நல்ல சுகாதாரம்

நல்ல கண் சுகாதாரத்தின் மூலம் கண் நோய்த்தொற்றைத் தடுக்கலாம். கண்களை தேய்க்காமல் இருப்பது, உங்கள் கைகளை அடிக்கடி சோப்புடன் கழுவுவது, கிருமி நீக்கம் மற்றும் சுத்தம் செய்தல் போன்ற பல்வேறு பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்