தினமும் சிறிது நேரம் இசை கேட்பது பெரும்பாலானோரின் பொதுவான வழக்கமாகும். இசையைக் கேட்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு எண்ணற்ற நன்மைகளைத் தருகிறது
எடையிழப்புக்கு ஆதரவாக
பிடித்த இசையைக் கொண்டு உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு எடையை விரைவாக குறைக்க முடியும்
இதய ஆரோக்கியத்திற்கு
இனிமையான மற்றும் அமைதியான பாடல்களைக் கேட்பது உடலில் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இது மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் இரத்தத்தில் செரோடோனின் மற்றும் எண்டோர்பின் அளவை அதிகரித்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
நினைவாற்றலை மேம்படுத்த
இசை கேட்பது தகவலைச் செயலாக்குவதற்கும், நினைவாற்றலை மேம்படுத்துவதற்கும் உதவும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இதன் மூலம் அல்சைமர் போன்ற நினைவாற்ற இழப்பு அபாயத்திலிருந்து விடுபடலாம்
சீரான தூக்கத்திற்கு
தூக்கமின்மை பிரச்சனை கொண்டவர்கள் இசை கேட்டு தூங்குவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். இது அவர்களின் உடல் மற்றும் மனதை தளர்த்தி விரைவில் நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவுகிறது
கவலை, மனச்சோர்வு நீங்க
அமைதியான இசையின் பண்புகள் கவலை, மனச்சோர்வு அறிகுறிகளை நீக்குவதற்கு உதவுகிறது. இது மன அமைதியைத் தரும் வகையில் அமைகிறது
நல்ல மனநிலை மேம்பாட்டிற்கு
இசையைக் கேட்பதன் மூலம் உடலில் மகிழ்ச்சியான ஹார்மோனான டோபமைனின் உற்பத்தியை அதிகரிக்கலாம். இது ஒரு நபரின் கவலையைப் போக்கி பிரகாசமானதாக மாற்ற உதவுகிறது