உடலுவுக்கு பின்னர் ஆண் - பெண் இருவருக்கும் உடலில் ஒரு சில மாற்றங்கள் ஏற்படும். அவை இயல்பானவை தான். அவற்றை கண்டு நாம் எந்த அச்சமும் கொள்ள வேண்டாம். உடலுறவுக்கு பின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி இங்கு காணலாம்.
இளம்சிவப்பு தடிப்புகள்
உடலுறவுக்கு பின் பெரும்பாலும் பெண்களின் முகத்தில் இளம்சிவப்பு நிற தடிப்புகள் காண்டப்படும். இவை, இயல்பானவை. உடலுறவில் உச்சம் கொள்ளும் போது உண்டாகும் இரத்த ஓட்ட மாறுபாடே இதற்கு முக்கிய காரணம்.
விந்து வடிதல்
உடலுறவுக்கு பின் ஆண்களின் பிறப்புறுப்பில் இருந்து சிறிது நேரம் ‘பிசின்’ போன்ற திரவம் வடிவது முற்றிலும் இயல்பானது. இதை கண்டு நீங்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.
உடல் சோர்வு
உடலுறவுக்கு பின் சோர்வு என்பது, பெரும்பாலும் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று. விந்து வெளியேற்றத்தின் காரணமாக ஏற்படும் ஆற்றல் இழப்பு ஆண்களை சோர்வடைய செய்கிறது.
சிறிய கொப்புளங்கள்
உடலுறவுக்கு பின் உங்கள் உடம்பில் சிறிய அளவு கொப்புளங்கள் தோன்றலாம். இது உடல்களின் உராய்வின் காரணமாக உடலில் உள்ள முடிகள் சேதமடைவதால் தோன்றுகிறது.
பெண்ணுறுப்பு தளர்வு
உடலுறவுக்கு பின் பெரும்பாலான பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று பிறப்புறுப்பு தளர்வு. தொடர்ச்சியான உடலுறவு காரணமாக தளர்வடையும் பெண்ணுறுப்பு இயல்பு நிலைக்கு திரும்ப ஒரு சில உடற்பயிற்சிகளை பின்பற்றலாம்.
அடிவயிற்று வலி
இது பெரும்பாலும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று. உடலுறவுக்கு பின் அடிவயிற்று சதை பிடிப்பு - வலி உண்டாவது பொதுவானது. இந்த வலியில் இருந்து நிவாரணம் பெற உடலுறவுக்கு பின் சிறுநீர் கழிப்பது நல்லது.
இரத்த கசிவு
உடலுறவின் போது பெண்களின் பிறப்புறுப்பில் இருந்து இரத்தம் கசிவது இயல்பான ஒன்று. கன்னித்திரை அல்லது ஹைமன் எனப்படும் மெல்லிய சவ்வு சேதத்தின் காரணமாக ஏற்படும் இந்த இரத்த கசிவு, மிகவும் அரிதான சமயங்களில் உண்டாகும்.