இன்றைய காலகட்டத்தில் பல்வேறு காரணிகளால் பலரும் மன அழுத்தத்தை சந்திக்கின்றனர். இதில் மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும் சில எண்ணெய்களைக் காணலாம்
எலுமிச்சை எண்ணெய்
எலுமிச்சை எண்ணெயின் புத்துணர்ச்சியூட்டும் வாசனை மனநிலை மற்றும் சக்தியை மேம்படுத்த உதவுகிறது. இது புத்துணர்ச்சியுடன் உணர வைக்கிறது
ரோஸ்மேரி எண்ணெய்
இந்த எண்ணெயைப் பயன்படுத்துவது மனத்தெளிவை மேம்படுத்தி மன அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது பிஸியான நாள்களுக்கு மிகவும் ஏற்றதாகும்
மிளகுக்கீரை எண்ணெய்
மிளகுக்கீரை எண்ணெய் ஆனது அதன் புத்துணர்ச்சியூட்டும் பண்புகளுக்காக நன்கு பெயர் பெற்றதாகும். இது சோர்வைக் குறைத்து கவனத்தை மேம்படுத்துகிறது. மேலும், இது உற்சாகத்தைத் தருகிறது
லாவெண்டர் எண்ணெய்
லாவெண்டர் எண்ணெய் ஆனது மன அழுத்தத்தைக் குறைக்கும் பண்புகளுக்காக நன்கு பெயர் பெற்றதாகும். இதன் இனிமையான நறுமணம் மனதை அமைதிப்படுத்தவும், நிம்மதியான தூக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது
ஆரஞ்சு எண்ணெய்
சிட்ரஸ் வகையான ஆரஞ்சு எண்ணெயைப் பயன்படுத்துவது நேர்மறையான ஆற்றலைத் தருகிறது. இது காலை நடைமுறைகளுக்கு ஏற்றதாகும்
யூகலிப்டஸ் எண்ணெய்
இந்த எண்ணெயின் குளிர்ச்சியான நறுமணம் மன சோர்வை நீக்கி, தளர்வுக்கு ஆழ்ந்த சுவாசத்தை ஊக்குவிக்கிறது