மோசமான வாழ்க்கை முறையால் மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற பிரச்சனைகளைப் பலரும் சந்திக்கின்றனர். இதில் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைக்க உதவும் சில உணவுகளைக் காணலாம்
ப்ளூபெர்ரி
அவுரிநெல்லி எனப்படும் ப்ளூபெர்ரி வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளைக் கொண்டுள்ளது. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும், மனச்சோர்வு, பதட்டத்தின் அறிகுறிகளைக் குறைக்கவும் உதவுகிறது
வாழைப்பழங்கள்
தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது மனநிலையை மேம்படுத்தலாம். மேலும் வாழைப்பழத்தில் உள்ள மக்னீசியம் சத்துக்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், பதட்டத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது
சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிக செறிவுடன் காணப்படுகிறது. இவை உடல் அழுத்தத்துடன், மன அழுத்தத்தைக் குறைக்கவும், நிர்வகிக்கவும் உதவுகிறது
சால்மன் மீன்
சால்மனில் உள்ள வைட்டமின் டி சத்துக்கள் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது நரம்பியல் கடத்திகளான செரோடோனின் மற்றும் டோபமைன் போன்றவற்றைக் கட்டுப்படுத்த உதவுகிறது
பீன்ஸ்
பீன்ஸில் உள்ள ஊட்டச்சத்து கலவை பதட்டத்தை குறைக்கவும், மனநிலை மேம்பாட்டிலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் மக்னீசியம் போன்றவை மன அழுத்தத்தைக் குறைக்கிறது
டார்க் சாக்லேட்
உணவில் டார்க் சாக்லேட் சேர்ப்பது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது மூளைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், மூளை செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது