ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்ல இரவு தூக்கம் அவசியமாகும். எனவே நல்ல, ஆரோக்கியமான தூக்கத்தைப் பெற உறங்கும் நேரத்தில் சில பழக்க வழக்கங்கள் செய்வதைத் தவிர்க்க வேண்டும்
உடற்பயிற்சியைத் தவிர்ப்பது
உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதாக இருப்பினும், இதை உறங்கும் முன் செய்ய வேண்டியது அல்ல. ஏனெனில், இது மோசமான தூக்கத்தை ஏற்படுத்தலாம்
காஃபின் உட்கொள்ளுதல்
தூங்குவதற்கு முன்னதாக காஃபின் உட்கொள்வதால், உடலிலுள்ள மெலடோனின் அளவை பாதித்து, விழித்திருக்க வைக்கும். எனவே படுக்கைக்குச் செல்வதற்கு குறைந்தது ஆறு மணி நேரத்திற்கு முன் காஃபின் உட்கொள்வது நல்லது
திரைநேரம் தவிர்ப்பது
தூங்குவதற்கு முன்னதாக செல்போன் போன்ற மின்னணு சாதனங்கள் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். இந்த நீல ஒளியை வெளிப்படுத்துவது உடலின் சர்க்காடியன் ரிதம் மற்றும் தூக்கத்தின் தரத்தைப் பாதிக்கிறது
தாமதமாக சாப்பிடுவது
இரவில் தாமதமாக உட்கொள்வது அதிலும் குறிப்பாக கலோரிகள் நிறைந்த உணவை உட்கொள்வது தூக்க சுழற்சியை சீர்குலைத்து உடல் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கலாம்
ஆல்கஹாலைத் தவிர்ப்பது
படுக்கைக்கு முன்னதாக மது அருந்துவதால் தூக்கத்தின் தரம் பாதிக்கப்படுவதுடன், இடையில் அடிக்கடி எழ வைக்கும். இது உடலை சோர்வடையச் செய்து, ஆற்றலைப் பாதிக்கிறது