மனைவி கிட்ட பொய் சொல்லி மாட்டிக்கிறதுக்குள்ள... இந்த 5 விஷயங்கள யோசிச்சிக்கோங்க!
By Kanimozhi Pannerselvam
29 Dec 2023, 19:01 IST
வாழ்க்கை துணையின் குணம்
சொல்வரும் விஷயத்தை உங்கள் மனைவி புரிந்து கொள்ள மாட்டார் என்று முன்கூட்டியே எப்போதும் தீர்மானிக்காதீர்கள். உங்கள் பொய்களை ஒப்புக்கொள்ளும் போது நீங்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்தால், உங்கள் பார்ட்னர் அதனைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் வாய்ப்பு அதிகம்.
அமைதியை சோதிக்காதீர்கள்
உங்களை எப்போதும் நம்பும் உங்கள் துணையிடம் நீங்கள் நூற்றுக்கணக்கான பொய்களைச் சொன்னால், அவர்களிடமிருந்து கட்டாயம் அதற்கான எதிர்வினை இருக்கும். அவர்கள் கோபப்பட்டு உங்களுடன் சண்டையிடலாம். அந்த நேரத்தில் உங்கள் அமைதியைப் பேணுவதும், உங்கள் துணையை அமைதிப்படுத்த முயற்சிப்பதும் மிகவும் முக்கியம்.
குறை சொல்லாதீர்கள் உங்கள் பொய்களுக்கு வேறொருவரைக் குறை கூறுவது மிகவும் எளிதானது மற்றும் இயற்கையானது. உங்கள் பொய்களுக்கு வெவ்வேறு நபர்கள், சூழ்நிலைகள் போன்றவை குற்றம் சாட்டப்படலாம். புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், நீங்கள் பொய் சொல்லத் தேர்ந்தெடுத்தீர்கள். அப்படிச் செய்வதற்கு உங்கள் காரணங்கள் இருந்தாலும், அதை மற்றவர்கள் மீது வைப்பது நல்லதல்ல.
துன்புறுத்தாதீர்கள்
உங்கள் தவறை மறைக்க எக்காரணம் கொண்டு உங்கள் வாழ்க்கை துணையை பலிகடா ஆக்க பார்க்காதீர்கள். அதேசமயம் நேர்மையாக பொய்யை ஒப்புக்கொண்டால் அதனை உங்கள் மனைவி மன்னிக்க வாய்ப்புள்ளது.
காலம் அனைத்தையும் மாற்றும்
உங்கள் துணையின் நம்பிக்கையை நீங்கள் உடைத்துவிட்டால், அவர்கள் அதிலிருந்து வெளிவர சிறிது நேரம் எடுக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அந்த உணர்ச்சிகரமான கட்டத்தில், எதையும் கட்டாயப்படுத்துவதில் அர்த்தமில்லை. நீங்கள் உண்மையைப் பேசும்போது கூட உங்கள் பார்ட்னர் உங்களை நம்பாதிருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே காலம் கைகூடி வரும் வரை பொறுத்திருங்கள்.