உஷார்... இந்த 5 பழக்கங்கள் நீங்க சீக்கிரமா வயசாக காரணமாம்!

By Kanimozhi Pannerselvam
15 Jan 2024, 10:34 IST

அழற்சி உணவு

விரைவில் வயதான தோற்றத்தை அடைய நமது உணவு முறை மிகவும் முக்கியமான காரணியாக அமைகிறது. நாம் உண்ணும் உணவில் அழற்சி அல்லது அழற்சியற்ற கூறுகள் உள்ளன. அழற்சி உணவை உண்பது செல்கள் விரைவி வயதாகக்கூடிய டெலோமரேஸ் என்ற நொதியால் பாதிக்கப்பட்டு விரைவில் இறக்கக்கூடும்.

புகைப்பிடித்தல், மது

புகைபிடித்தல், அதிகப்படியான மது அருந்துதல் மற்றும் தவறான உணவுத் தேர்வுகள் போன்ற போதைகள் அனைத்தும் நம் உடலில் மன அழுத்தம் மற்றும் வீக்கத்தை அதிகரிக்க பங்களிக்கின்றன. இது வயதாகும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது.

சூரிய ஒளி

சூரிய ஒளியில் சருமத்தை அதிக நேரம் எக்ஸ்போஸ் செய்வதும் வயதாகும் செயல்முறையை அதிகப்படுத்துகிறது. நீங்கள் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தமாட்டீர்கள் என்றால் இது நிச்சயம் உங்களுக்கு நிகழலாம். எனவே SPF எனப்படும் அதிக சூரிய பாதுகாப்பு காரணி கொண்ட சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது அவசியம்

வயதான எதிர்ப்புக்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாத அங்கமாகும் என்பதை நான் சேர்க்க விரும்புகிறேன். தற்போதுள்ள தசைகளின் தொனி மற்றும் அமைப்பைப் பராமரிப்பதோடு புதிய தசை வலிமையைக் கொண்டுவர உடற்பயிற்சி உதவுகிறது.

சரியான தூக்கமின்மை

ஒரு மனிதன் சராசரியாக 26 வருடங்கள் தூங்குகிறார். சரியான தூக்கமின்மை நமது உறுப்புகள் மற்றும் பல்வேறு உடல் செயல்பாடுகளை பாதிக்கிறது.