உங்கள் குழந்தைக்கு கட்டாயம் கற்பிக்க வேண்டிய 6 விஷயங்கள்!
By Kanimozhi Pannerselvam
15 Dec 2023, 16:08 IST
சொந்த வேலையை கற்றுக்கொடுங்கள்
தங்கள் சொந்த வேலைகளைச் செய்ய குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். தட்டுகளை டேபிளில் இருந்து எடுத்துச் செல்வது, பைகளை பேக் செய்வது, பொருட்களை எடுத்த இடத்தில் வைப்பது போன்ற சிறிய வேலைகளை செய்ய கற்றுக்கொடுக்கலாம்.
மரியாதை கொடுப்பது
பெரியவர்களை மதிக்க கற்றுக்கொடுங்கள். உங்களைப் பார்த்து தான் குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள்.எனவே அவர்கள் முன்பு பெரியவர்களின் காலில் விழுந்து வணங்குவது, அவர்களை மரியாதையாக நடத்துவதை செய்யுங்கள்.
வேலை கற்றுக்கொடுப்பது குழந்தைக்கு சிறிய பணிகளை கொடுங்கள், தண்ணீர் எடுப்பது, புத்தக அலமாரிகளை ஒழுங்கமைப்பது போன்றவற்றை செய்யச் சொல்லலாம்.
பொறுப்பு கொடுங்கள்
சிறிய முடிவுகளை எடுக்க சுதந்திரம் கொடுங்கள். இது குழந்தையின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும், குழந்தை பயமற்றதாக மாறும்.
பணத்தின் முக்கியத்துவம்
பணத்தின் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுங்கள். தேவைப்பட்டால், செலவுக்கு பணத்தை அவர்கள் கையிலேயே கொடுத்து பயன்படுத்த வையுங்கள். இது பிள்ளைக்கு பொறுப்ப அதிகரிக்கும்.
ஒழுக்கம்
ஒழுக்கத்தை கற்றுக்கொடுங்கள். நேரத்துக்குத் தூங்குவது, விழிப்பது, பள்ளிக்குச் செல்வது ஆகியவை அவர்களது வாழ்க்கையை பின்னாளில் சீரமைக்க உதவும்.