மன அழுத்தம்
மன அழுத்தம் என்பது வாழ்க்கையின் தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஆனால் இது நாள்பட்டதாக மாறும் போது குறிப்பிடத்தக்க உடல் நலப்பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது
உடல் அறிகுறிகள்
மன அழுத்தத்தின் முக்கிய அறிகுறிகளாக தலைவலி, தோல் மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். மேலும் இதய பிரச்சனைகள், நோயெதிர்ப்பு ஒடுக்கம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. இந்த அறிகுறிகளைப் புரிந்து கொள்வது மன அழுத்தத்தைத் தணித்து ஒட்டுமொத்த நல்வாழ்வை பராமரிக்க உதவுகிறது
செரிமான பிரச்சினைகள்
மன அழுத்தம் செரிமான அமைப்பை கணிசமாக பாதிக்கலாம். இதன் அறிகுறிகளில் வயிற்றுவலி, குமட்டல் மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி போன்றவை அடங்கும். இது செரிமான அமைப்பின் சாதாரண செரிமான செயல்பாடுகளை சீர்குலைக்கிறது
தலைவலி
மன அழுத்தம் அடிக்கடி தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலிக்கு வழிவகுக்கலாம். இதில் தலை மற்றும் கழுத்தில் உள்ள தசைகள் இறுக்கமடைந்து வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்
தசை பதற்றம்
மன அழுத்தம் ஏற்படுவது தசைகளை சுருங்கச் செய்து பதற்றமாக வைக்க உதவுகிறது. இது உடலின் பல்வேறு பகுதிகளில் அதிலும் குறிப்பாக கழுத்து, தோள்பட்டை, முதுகு போன்ற பகுதிகளில் வலியை ஏற்படுத்தலாம்
இதய பிரச்சனைகள்
மன அழுத்தம் இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம். நீண்டகால மன அழுத்தத்தால் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படலாம். மன அழுத்தம் தொடர்பான அட்ரீனல் அதிகரிப்புகள் ஒழுங்கற்ற இதயத்துடிப்பை ஏற்படுத்தலாம்
குறைந்த நோயெதிர்ப்பு அமைப்பு
நீடித்த மன அழுத்தத்தால் நோயெதிர்ப்பு மண்டலம் வலுவிழக்கப்படலாம். இது நோய்த்தொற்றுக்களால் எளிதில் பாதிக்கப்படலாம். மேலும் கார்டிசோல் போன்ற மன அழுத்த ஹார்மோன்கள் நோயெதிர்ப்பு செயல்திறனைக் குறைக்கலாம்