மழைக்கால சோம்பலைத் தவிர்க்க உதவும் எளிய வழிகள்

By Gowthami Subramani
02 Jul 2024, 13:30 IST

பலரும் மழைக்காலத்தில் சோம்பல் உணர்வை அனுபவிக்கின்றனர். இது அவர்களின் தினசரி அட்டவணையை பாதிக்கலாம். எனினும் மழைக்கால சோம்பலைத் தவிர்க்க சில எளிய வழிகளைப் பின்பற்றலாம்

மழைக்கால சோர்வுக்குக் காரணம்

பருவமழை மாற்றத்தின் போது சூரிய ஒளியின் வெளிப்பாடு குறைவதால், மெலடோனின் எனப்படும் தூக்கத்தைத் தூண்டும் ஹார்மோனின் உற்பத்தி அதிகரிக்கப்படுகிறது. இதுவே சோர்வுக்குக் காரணமாகும்

சூரியஒளி வெளிப்பாடு

மழைக்காலங்களில் சூரிய ஒளி வெளிப்பாட்டைப் பெறுவதன் மூலம் தூக்கத்திற்கான ஹார்மோன் குறைக்கப்படும். இதன் மூலம் சோம்பலைத் தவிர்க்கலாம்

ஆரோக்கியமான உணவு

உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் மெலிந்த புரதங்கள் போன்ற சத்தான உணவுகளைப் பெறலாம்

உட்புற உடற்பயிற்சி

மழைக்காலத்தில் யோகா, ஏரோபிக்ஸ் அல்லது ஜிம் போன்ற வழக்கமான உட்புற பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் சோம்பலைத் தவிர்த்து சுறுசுறுப்பாக இருக்க முடியும்

கொழுப்பு நிறைந்த உணவுகள்

வறுத்த உணவுகள் போன்ற கொழுப்பு நிறைந்த சோம்பலைத் தூண்டும் உணவைத் தவிர்க்க வேண்டும் அல்லது கட்டுப்படுத்த வேண்டும்

சுய கவனிப்பில் ஈடுபடுவது

குளியல் அல்லது தனிப்பட்டசீர்படுத்தும் பயிற்சி போன்ற சுய கவனிப்பின் மூலம் ஆற்றல் நிலைகளை நிரப்ப வேண்டும் அல்லது மனநிலையை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபட வேண்டும்