ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றுவதன் மூலம், நோய்வாய்ப்படும் அபாயத்தைக் குறைக்கலாம். அதன் படி, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான சில குறிப்புகளைக் காணலாம்
உடற்பயிற்சி செய்வது
உட்கார்ந்த வாழ்க்கை முறையால் பல நோய்களைச் சந்திக்கும் நிலை ஏற்படலாம். எனவே உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கலாம். மேலும் இது நீண்ட கால ஆரோக்கியத்திற்கு உதவக்கூடியதாகும்
சரிவிகித உணவு
பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், கொட்டைகள், விதைகள் மற்றும் முழு தானியங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெற முடியும்
நீரேற்றமாக இருப்பது
உடலில் ஏற்படும் நீரிழப்பு காரணமாக பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம். இதனைத் தவிர்க்க நன்கு நீரேற்றமாக இருப்பது அவசியமாகிறது. அதன் படி, ஒரு நாளைக்கு 8 கிளாஸ் தண்ணீர் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்
போதுமான நல்ல தூக்கம்
தூக்கமின்மை பிரச்சனை உடல் மற்றும் மனம் இரண்டையும் பாதிக்கும் காரணியாக அமைகிறது. எனவே தினமும் ஆரோக்கியமான நல்ல இரவு தூக்கம் பெறுவதை உறுதி செய்து கொள்ளவேண்டும்
தீங்கு விளைவிக்கும் பொருள்களைத் தவிர்ப்பது
மது அருந்துதல், புகைபிடித்தல் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் பொருள்களிலிருந்து விலகி நிற்க வேண்டும்
மன அழுத்தத்தை நிர்வகிப்பது
அதிகளவிலான மன அழுத்தம் உடல்நல ஆரோக்கியத்தையும் பாதிக்கும். எனவே, மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் முயற்சிகளைக் கையாள வேண்டும்